பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரன். அண்ணாதுரை அவனவன் வினைப்பயன் - அயன் அன்று எழுதியது ஆண்டவன் அவனை உயர்ந்த ஜாதியாகப் பிறப்பித்து விட்டான் என்று பேசுவதும் நம்புவதும், பழங்கதை யாகி விட்டதுடன், அவன் ஏன் உயர்ந்தான், எப்படி உயர்ந்தான், அந்த உயர்வு' எவ்வளவு 'கேடு' செய்கிறது என்பது பற்றி, எண்ணவும் பேசவும் மக்கள் முன் வந்து விட்டனர். இந்த விழிப்புணர்ச்சியின் காரணமாக சமூகத்திலே புது நிதி காணவேண்டும், என்ற உரிமை உணர்ச்சி கிளம்பிற்று. நாமும் வாழப் பிறந்தவர்கள் தான்- நாமும் இந்நாட்டுக் குடிகள் தாம் - நாம் யாருக்கும் தாழ்ந்தவர்களல்ல-யாரையும் நாம் தாழ்வாகக் கருதவும் கூடாது என்ற அறிவுடைமைப் பேச்சு கிளம்பிற்று. கல்வி நிலயங்களில், உத்தியோக மண்டலங்களில், ஊராட்சி மன்றங்களில், பயன் தரும் அலுவலகங்களிலே எல்லாம், ஒரே வகுப்பார். ஏகபோக யிராசு செலுத்து கிறார்களே ஏன்? எப்படி? ஏன் இப்படி ஒரு நிலைமை வளர்ந்தது? அதோ ஆசிரியர் அரங்கசாமி அய்யர் போகி றார், இதோ பார் வக்கீல் வரதாச்சாரியார், டாக்டர் ரங் காச்சாரியார் ரோல்ஸ் ராய்ஸ் பார் கலெக்டர் கலியாண ராமய்யர், ஆடிட்டர் அனந்தாச்சாரியார், தாசில்தார் சுந்தர ராஜ் அய்யங்கார்!-என்று பேசப்படவேண்டிய விதமாக உத்யோக மண்டலம் ஒரு வகுப்பாரின் ஏகபோக மிராசு பாத்யதையாக இருந்தது. சகல துறைகளி லும், வாழ் வில் மேன்மையும் பயனும் தரத்தக்க சகல முனைகளிலும் ஒரே வகுப்பார் குவிந்து விட்டனர்.--அதிலும் அந்த

அளவுக்கு ஏகபோக மிராசு செலுத்திய வகுப்பு, சமூகத்


21