பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை, கலியாணராமய்யரைத் தாசில்தார் தீர்த்தகிரி முதலியார் வரவேற்றார் என்றும், வக்கீல் வரதாச்சாரியாருக்கு டாக்டர் அண்ணாமலைப்பிள்ளை ஆபரேஷன் செய்தார் என்றும் ஆசிரியர் அருமை நாயகத்தைப் பற்றி ஆடிட்டர் சுந்தரராமய்யர் பாராட்டினார் என்றும்- இவ்விதமான பேச்சு,நாட்டிலே பேச முடிந்தது. இது பொறுக்கவில்லை ஆதிக்கக்காரர்களுக்கு வகுப்புவாரி முறையின் துவக்க முதல், அதைத் தொலைத்த நாள்வரை, போரிட்ட வண்ணம் இருந்தனர். பல வழிகளாலும். வெற்றிபெற்றும் விட்டனர்- வகுப்பு. வாதிகள் வகுப்பு எதேச்சதிகாரம் செய்ய, தகுதி என்ற தந்திரா யுதத்தைப் பயன்படுத்தினர். எந்த வகுப்புவாரி முறை, சமூகக் கட்டுக் கோப் பைக் காப்பாற்றி வந்ததோ, எந்த வகுப்புவாரி முறை வகுப்பு. எதேச்சதிகாரத்தை ஓரளவு ஒழித்து வகுப்பு: நீதியை வழங்கிற்றோ, எந்த வகுப்புவாரி முறை, வரியில் பெரும் பகுதியைக் கொட்டிக் கொடுத்து, நாட்டைக் காக்க இரத்தம் சிந்திய பெரும்பான்மையினர். ஓரளவு கல்வி வசதி பெறவும் உத்தியோக உரிமை பெறவும் உதவிற்றோ, எந்த வகுப்புவாரி முறைக்காக தியாகரின் தியாகமும், நாயரின் நுண்ணறிவும், பனகலின் பரிபா லனத் திறனும், நடேசனாரின் அறிவாற்றலும், முத்தை யாவின் உத்தரவும் பயன்படுத்தப்பட்டதோ எந்த வகுப்பு

27

27