பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை. பிராமணர்,உன்னை ஏற்றுக்கொள்வர்!" என்று கதறி னான். சம்பூகன் தலை, ராஜா ராமனால் துண்டிக்கப்பட்டது. பார்ப்பனக்குழத்தை உயிர்பெற்று எழுந்தது! இதுதான் பிராம்மணியம் சனாதனம்-வருணாஸ்ர மம் - முதல் போடாத ஆரிய சுரண்டல் இயந்திரம். இந்தச் சுரண்டல் அமைப்பு முறையில், தொழில் தூற்றப்பட்டது, உழவு பழிக்கப்பட்டது; மானம் நிந்திக் கப்பட்ட அ,வீரம் வாழ்க்கையை விட்டே விரட்டப்பட்டு விட்டது. தொழிலுக்கு பதில் தூபதீபம், உழவுக்குப் பதில் யாக யோகம், மானத்துக்குப் பதில் உயர், வீரத்துக்குப் பதில் வஞ்சகம், நாட்டு மக்களிடம் புகுத்தப்பட்ட வாள் இருந்த இடத்தைப் புல் பற்றிக்கொண்டது. அரிமா இருந்த இடத்தில் நரி அமர்ந்து விட்டது. அறிவு அகற்றப்பட்டு, மாயை பற்றிய பேச்சு வலுத் த்து, மனிதனை மனிதனாகவே கண்டு பழகும் நிலை தொலைந்து,மனிதனைப் பிறப்பினாலேயே தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று பேசி வெறுக்கும் ஜாதி வேற்றுமை வளர்ந்தது. அறம்,பொருள், இன்பம் பற்றி மட்டுமே பேசி. மக்களை நல்வழிப்படுத்தும் தமிழ்நூற்கள் பலவும் மறைக்

35


35