பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை சம்பூகன் போன்ற தியாகிகள் தோன்றவில்லை, உரி மையைப் பெற உயிரைப் பணயம் வைக்கும் இயல்பினர் ஏற்படவில்லை. விபீஷணர்கள். சுக்ரீவர்கள், அனுமான் கள் கூட்டம் பெருத்தது! சாகப் பிறந்த நமக்குப் படிப்பெதற்கு? வேலை செய் யப்பிறந்த நமக்குப் படிப்பெதற்கு? கல்வி கற்றாலும் நமக்கு வராது! நாம் அடிமை; எண்ணும் எழுத்தும் நமது நாவிலே நுழையாது! அது பார்ப்பனர்களின் தொழில் பிறப்புரிமை - என்ற நினைப்பு, அரிக்க முடியாத நிலையில், ஆழப்பதிந்து விட்டது இந்த நாட்டில், வீரர்களை வீழ்த்த. சமரசம் பேசினவர்களைச் சிதைக்க, சமத்துவம் போதித்தவர்களைச் சாய்க்க, சாணக் கியர்கள் - காகப்பட்டர்கள் - வெங்கண்ணாக்கள் - உமிச் சந்துகள் தோன்றலாயினர். பொய் மலிந்த புராண புருஷர்கள் அல்ல இவர்கள்; வரலாற்றிலே இடம் பெற் றுள்ள நல்லவர்கள்! மனுவின் ஏற்பாட்டால், சனாதன தர்மத்தால், பார்ப் பனர் ஒருவரே உயர் வாழ்வு வாழமுடிந்தது; மற்றவர் களைத் தங்கள் கருத்துக்கிசைய ஆடச் செய்ய முடிந்தது; மற்றவர்களைக் காலடியில் போட்டு மிதித்துத் துவைக்க முடிந்தது. பிராம்மணிய ஏற்பாட்டால் சகல சம்பத்தும், பார்த்த உடனே உயர்ந்தவன் என்று பிறர் புகழ்ந்து கூறும், உலகத்தில் வேறு எங்கும் எவருக்கும் கிடைக்காது.

37.


37