பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை காயத்திரி மறந்து போய்விட்டது. நாலு ஆஸ்ரம் மும் நிலை குலைந்து போய் விட்டது. வேள்விப் புகை இல்லை வேத கோஷம் இல்லை. எல்லாம் தொலைந்தது. காலத்துக்கேற்ற கோலம் பூணும் நாடகம் தான் நிலைத்து நின்றது. உருவத்திலே மாற்றம் தொழிவிலே தலை கீழ் புரட்சி --- வாழ்க்கையிலே திருத்தம்-இவ்வளவு மாறின பின்னரும், உள்ளம் அப்படியே இருந்தது. உள்ளத் திலே மனு மறைந்திருந்தார்; நால் வருண ஆசார ஆபா சம் புகுத்திருந்தது; தான் உயர்ந்தவன்; மற்றவன் தாழ்ந்தவன் - அடிமை என்ற ஆணவம் நிரம்பி இருந்தது! அதே ஆபாசமான அடிப்படையின் மீது, காகரிக் மான கட்டிடம் கட்டப்பட்டு விட்டது. ஆங்கிலப் போர்வையில் ஆரியம் வட்டமிட்டு வந் தது. ஆரியத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கொடுக்கத் தொடங்கியபோதிலும், ஆரிய ஆபாசக் கோட்பாடு, ஆங் கில அதிகாரத்துடன் முடிந்தவரையில் ஆட்சி செய்தது, சனாதனம் ஜனநாயகப் பூச்சுடன் ஜொலிக்க ஆரம்பித் தது. புதிய ஆபத்தை அகற்ற நமது தலைவர்கள் திட் மிட்டனர். ஆரியத்தின் எதிர்ப்பு ஒரு பக்கம், நம்மவர் களின் ஆரிய மயக்கத்தால் எழுந்த ஆபத்து மற்றோர் பக்கம். புலவித இன்னல்களுக்குப் பிறகு நாட்டாட்சிப்

43


43