பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு பொறுப்பில் நம்மவர்கள் அமர்ந்தனர். ஆரிய ஆதிபத் தியத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர். அரசாங்க அலுவல் அகங்களிலே அமர்த்த நம்மவர் களிலே ஆள்கிடைப்பதில்லை. அதற்கான காரணத்தை ஆராய்ந்தனர். எல்லாவிதக் கல்லூரிகளிலும் நம்மவர் ஆள் அதிகமாக சேர்க்கப்பட்டால்தான், அந்தப் பிரச் னையை ஓரளவிற்காவது சரிக்கட்ட முடியுமென்ற முடி விற்கு வந்தனர். அதன் விளைவுதான் கம்யூனல் ஜி.ஓ. என்னும் சமூக நீதி முறை. மனு மாந்தாதாபோல் மனிதப் பண்பை இழந் திருக்களில்லை நம்மவர்கள். நம்மை இழித்துப் பழித்துப் பேசு, இந்து சமுதாயத்தின் கோடியிலே ஒதுக்கித் தள்ளி, முன்னேற முடியாமல் அழுத்தி வைத்திருந்த

  • சமூகத்தை, பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று நம்

மவர்கள் எண்ணி இருந்தால்கூட, அது குற்றமுடை யது என்று பார்ப்பன சமூகமே கூட கூறத் துணியாது. நம்மவர்கள் இளகிய மனதோடு நடந்து கொண்ட னர் செயலிலே கண்ணியம் இருக்கப் பார்த்துக் கொண் டனர். நடுநீதி வழங்குவது என்ற முடிவிற்கு வந்தனர். பார்ப்பனர்களையும் தம் போன்ற மனிதக் கூட்டத்தினரே என்ற உயர்ந்த நினைப்பு கொண்டனர். அடிமை என்று பார்ப்பனர்களை, நம்மவர்கள் கன விலும் கருதவில்லை. 'சூத்திரர்' என்ற பட்டத்தை அவர் களுக்குச் கு சூட்டவில்லை. படிக்காதே பார்க்காதே.

44


44