பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை தொடாதே,தீண்டாதே. கிட்டே நெருங்காதே என்று ஆணை பிறப்பிக்கவில்லை. பின் என்ன செய்தார்கள்? பார்ப்பனர்கள் உள்பட அனைவரையும் ஒன்றாக மதிப்பிட்டார்கள். பார்ப்பனர்கள் எண்ணிக்கைக் கேற்பு - ஏன், அதற்குக் கூடுதலாகக் கூட, பள்ளிகளிலே இடம் கொடுக்க ஏற்பாடுசெய்தார்கள். இது பேத புத்தியாம் / பிளவு படுத்தும் சிறுமைக் குணமாம்! ஜனநாயகக் கோட்பாடிற்கு இது முரண்பட்டதாம்! மக்கள் கூட்டத்தை, ஒரு தாய் வயிற்றுக் குழந்தை கள் போல் பாவிக்காமல், பிளவுபடுத்தி, பிறப்பினாலேயே பேதப்படுத்தி,சமூகத்தைச் சீரழித்தவர்கள், மக்களை அவ மதித்து மாபாதகம் புரிந்தவர்கள் இன்றுள்ள பார்ப்பனர் களின் முன்னோர்கள் தான். அவர்கள் வழிவந்தவர்களாக இவர்கள் இல்லாவிட்டால், மனுவைப் போற்றவும், மக் களை அவமதிக்கவும், வருணாஸ்ரமத்தை வாழ்த்தவும் சமத்துவத்தைத் தூற்றவும், இன்றுள்ள அல்லாடியார். முதல் ஆலமரத்துப் பிள்ளையார் கோயில் அர்ச்சகன் வரையில், சல்லடம் கட்டிக் கொண்டு கிளம்பக் காரணம் என்ன? விளக்கம் கூறவேண்டும் அந்தக் இதற்கு! கூறுமா? தென்னாட்டைப் பொருத்த வரையில், கம்யூனல் ஜி.ஓ.திராவிட சமுதாயத்தின்- ஏன் பார்ப்பனர் உள் பட மனித சமுதாயத்தின் சுதந்தர சாசனம் ஆகும். பார்ப்பான், தன்னை மற்றவர்களிலும் உயர்ந்தவன் உடம்பால் உழைக்காமல் வாழப் பிறந்தவன், பிறர்

45


45