பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு உழைப்பிலே காலங் கழிக்கும் கடமை உடையவன், மற்ற வர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள், அடிமை வேலை செய்து வாழ வேண்டியவர்கள் என்ற ஆணவத்தை-ஜாதித் தியிரை தொலைத்துத் தலை முழுக முன் வரவேண்டும். தயார் தானா? வெள்ளையரோடு கைகுலுக்கி, விருந்துண்டு,பால் வித்தியாசம் இல்லாமல் பழகி, பலப்பல ல ஒழுக்கங்கெட்ட, காரியங்களைச் செய்து, நாகரிக வாழ்க்கையை நடத்தி னாலும், பார்ப்பனனின் விழியும் மொழியும், சுய ஜாதி யின் பாதுகாப்புக்குத்தானே பயன் படுகிறது? இந்தப் பாழ்பட்ட நிலத்தில் சமுத்துவமும், மக்களாட்சிக்கோட் பாடும், மனித நீதியும் தோன்றாதே- தோன்றினாலும் நிலைத்து நிற்காதே-நிலைத்தாலும் நீடித்து நிற்காதே! புதிய அரசியல் திட்டம் தீட்டப்பட்டாய்விட்டது. மக்களாட்சி முறைப்படி அல்ல, அத்திட்டம் தீட்டுவதற் கான குழு அமைந்தது. புதிய அரசியல் திட்டம், நேர் மையானது என்று ஏற்றுக் கொண்டுள்ள, வயது வந் தோர் அனைவரின் வாக்குரிமையாலும், தேர்ந்தெடுக்கப் பட்டதல்ல அரசியல் ஆக்க மன்றம்.காங்கிரஸ் மேலிடத் தின் கட்டளைப்படி, ஆங்கிலேயர் அளித்த அரசியல் உரிமையின் பலனாக உருவாக்கப்பட்டதுதான் அரசியல் ஆக்க மன்றம். மக்களாட்சி முறை அல்ல இது என எத் தனையோ அறிஞர்கள், எவ்வளவோ முறை இடித்திடித்

துக் கூறியாகிவிட்ட டது.


46