பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு தப் பண்போடு கூடியவர்களைக் காண முடியாது; அதற்கு மாறாக ஜாதி வெறியோடு கூடியவர்களைத்தான் காண முடியும். இந்திய அரசியல் சட்டம் தோற்றுவிக்க நினைக்கும் மனிதனை உற்பத்தி செய்யும் பேராற்றல் கம்யூனல் ஜி.ஒ.வுக்கு இருப்பதால், அது, இந்திய அரசி யல் சட்டம் இந்நாட்டில் கால் கொள்வதற்குத் துணை நிற்கக் கூடியதேயன்றி, அரசியல் சட்டத்தின் அடிப் படைக் கோட்பாட்டைத் தகர்க்கக் கூடியதன்று. எனவே, முரண்பாடு சட்டத்தில் இல்லை; அவரவர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் ஜாதிய கேட்டில் தான் இருக்கிறது. சுகம் அவர்களுக்கு துக்கம் நம்மவர்களுக்கு; இன்பம் அவர்களுக்கு- துன்பம் நம்மவர்களுக்கு; உல்லா சம் அவர்களுக்கு உபத்திரவம் நம்மவர்களுக்கு, உழைப் பின் பலன் அவர்களுக்கு உழைப்பு நம்மவர்களுக்கு ; உரிமை அவர்களுக்கு - கடமை நம்மவர்களுக்கு ; கற்பது அவர்கள்-கட்டை வெட்டுவது நாம்; அதிகாரம் செய் வது அவர்கள் - ஏவல் செய்வது நாம்; நிழலிலே அவர் கள் - வெய்யிலிலே நாம்; நெற்கதிர் பக்கத்திலே அவர் கள் -- சேற்றுக்கழனியிலே எம்; மாளிகையிலே அவர் கள் - மேற் கூரையில்லா மண் குடிசையிலே நாம்; என்பன போன்ற கேவல வாழ்க்கை முறையை, மனு வின் அக்கிரம மார்க்கத்தை, ஆட்டங் கொடுக்கச் செய் தது கம்யூனல் ஜி.ஒ.என்னும் சமூக நீதி முறைதான்.

50


50