பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு --- வதுஅய்யரும், அய்யங்காரும், முதலியாரும் நாய்க்கரும் அல்ல, மக்கள் - மக்கள். அந்த மக்களை உண்டாக்கு வதுதான் கம்யூனல் ஜி. ஓ.--சமூக நீதிமுறை. அந்தக்காலம் பிராம்மணியக்கோட்பாடுநடைமுறையில் இருந்த காலம். அயோத்தி இராமன் அரசாண்டகாலம் வசிஷ்டர் அறிவுரைப்படி அரசன் நீதி வழங்கியகாலம். சமூகத்தை விட்டுப் பிரித்துத் தனி மனிதனை மதிப் பிட்டுப் பார்க்காத நிலை அன்று. தனி மனிதனுக்குத் தனி உரிமை என்ற ஏற்பாடு இல்லை. சூத்திர சமூகம் தவம் செய்யக்கூடாது. சம்பூகன் சூத்திரன் - தவம் செய் தது குற்றம். தண்டனை தரப்படுகிறது, மனு முறைப் படி-சக்கரவர்த்தி இராமனால். இன்று மக்களாட்சிக் கோட்பாடுபற்றிப் பேசப் படுகிற காலம். மனு கோட்பாட்டைப் பகிரங்கமாக நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமெனப் பேச முடியாத காலம். சமூகம் சமூகமாகப் பேதப்படுத்திப் பார்ப்பது கண்டிக்கப்படும் காலம். எனவே, சனாதனப் பேச்சு மறைந்து ஜனநாயகப் பேச்சு கிளம்புகிறது. சமூக உயர்வு தாழ்வு பேசும் நிலையை மாற்றிக் கொண்டு, தனிமனித உரிமை என்ற கூக்குரல் கிளப்பப்படுகிறது. தனிமனித உரிமைக்குச் சட் டப்படி பாதுகாப்பும் செய்து கொண்டாகி விட்டது. சமூகத்தின் பெயர்கூறி, மனுவின் சட்டத்தைக்

சம்பூகன் தலை, துண்டிக்கப்பட்டது அன்று!


54