பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு இது குறைவாம் கடந்த ஆண்டில் இஞ்சினியரிங், வைத்தியக்கல்லூரி களில் கீழ்க் கண்டவாறு ஸ்தானங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டிருக்கின்றன :

சதவிகிதம்
பிராமணர் 20
பிராமணரல்லாதார் 58
கிறிஸ்துவர், ஆ. இந்தியர் 8
முஸ்லிம் 7
ஹரிஜனங்கள் 7

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைப்படி ஹரி ஜனங்களுக்கு இன்னும் அதிகமான சத விகிதம் கிடைத் திருக்க வேண்டும். அதற்கு தோதாக ஹரிஜன மாண வர்கள் இல்லை யாதலால், காலி ஸ்தானங்களைப் பெரும் பாலும் பிராமணப் பிள்ளைகளுக்கே தந்திருக்கிறார்கள். இப்படி செய்ததால் தான் 20 சதவிகிதம் பிராமணர்களுக் குக் கிடைத்திருக்கிறது. இதைத்தான் குறைவு என்று சர் அல்லாடி சொல்லுகிறார்- ஸ்ரீனிவாச அய்யங்கார் கர் ஜிக்கிறார். ஹிந்து, மித்திரன் போன்ற பிராமணப் பத்திரிகைகள் இதற்கு பக்கமேளம் கொட்டுகின்றன. கல்லூரிகளில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்துவர் நடத்தும் 'கிறிஸ் டியன் காலேஜில்' 1849-50 ல் இண்டாமிடியட் வகுப்புக்கு 88பிராமணர்சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

70


70