பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 100க்கு 97 பேர் இருக்கும் தேச மக்கள் கல்வி அறிவின்றி வாழ 3 சதவீகிதப் பேர் ஆதிக்க வெறியோடு அலைந்தால் எந்தக் குடியரசு தான் குடியரசாக இருக்க முடியும்? ஜார் காலத்தில் படித்தவர் பாமரரைக் கசக்கிப் பிழிந்த நிலை,இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியா விலும் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? நீர் மேல் எழுத்து ஜாதி, சமயமற்ற சர்த்தார் ஏற்பட்டிருக்கும் இந் நாளில் ஒரு ஜாதியார். மட்டும் உயர வரவும்; மற்றவர் அவர்களது காலடிப் புழுவெனக் கிடக்கவும் இருந்தால் நாட்டின் முன்னேற்றத்தை ஓடும் தண்ணீரில்தான் எழுதவேண்டும். பரிகாரம் வகுப்புகளின் ஜனத்தொகையின்படி அவரவ் களுக்குப் பள்ளிக்கூட இடங்களைப் பிடித்துத் தருவதாக இருக்கவேண்டும். இதற்காக அரசியலமைப்பைத் திருத்த வேண்டுமென்றால் திருத்தித்தான் ஆகவேண்டும். இதற் கான நட வடிக்கைகளுக்கு சென்னை சர்க்காரும் பொது மக்களும் தயாராகவே இருக்க வேண்டும். இப்படிச் செய்யாதிருக்கும் வரை தென்னிந்தியா ஜார் காலத்து ரஷ்யா மாதிரியும், ஒளரங்கசீப் காலத்து தர்பார் மண் டபம் மாதிரியாகவும் தானிருக்கும். இப்படி ஏற்படுவது மகாத்மாவின் நெறிக்கும், இந்தியக் குடியரசு லட்சியத்

78


73