பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொய்க் கூக்குரலை விளக்கும் புள்ளி விவரம் தோழர் டிஎஸ். சொக்கலிங்கம் அவர்களை ஆசிரிய ராகக் கொண்டுள்ள தினசரி இதழ் 31-7-50-ல் எழுதி யுள்ளதின் சுருக்கம் பிராமணர்கள் என்பதற்காக சென்னை சர்க்கார் அச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேல் படிப்புக் கான வசதியைக்கூட அளிக்க மறுக்கிறது என்பது கூக் குரல். இதுபற்றி ஓயாது பிரச்சாரம் நடந்து கொண்டிருக் கிறது. இதே காரணத்தைக் காட்டி. சர்க்காரின் வகுப்பு வாரி வீதாசார உத்தரவை ஆட்சேபித்து சமீபத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஹைகோர்ட்டும், ஜாதிமத. இன அடிப்படையில் காலேஜ்களில் அடமிஷன் செய்வது இந்திய குடியரசு அரசியல் 15(1), 29 (2) ஆகிய ஷரத்துகளுக்கு பொருத்தமல்ல என்று தீர்ப்பளித்தது வகுப்புலாரி வீதாசார உத்தரவு அரசியல் ஷரத் இம் துக்கு பொருந்தாததாக இருக்கலாம். ஆனால் பகுப்பு வீதாசார உத்தரவு பிராமணருக்கு காலேஜ்களில் கத் வடைத்து விட்டதா? பிராமண வாலிபர்களுக்குப் படிப்பு வசதி மறுக்கப் படுகிறது என்பது உண்மையா? மாகாணஜனத்தொகையில் 27 சதவிகிதத்தினராகவுள்ள பிராமணர் 40 சத விகித் அட்மிஷன்களை கலேஜ் களில் பெறுகின்றனர். அதோடு சென்ற இரு வருஷங்களில் அட்மிஷன் பெறும் மாணவர் தொகையும் அதிகரித்து வருகிறது. இந்த உண்மையை இக் கட்டுரையில் கண்ட புள்ளி விவரங்கள் வெட்ட வெளிச்ச மாக்குகின்றன.

75


75