பக்கம்:பொன் விலங்கு.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 189

கருத்தாழமும் கருத்தழகும் உள்ள இந்த வாக்கியத்தை நினைவு கூர்ந்தபோது இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்த சிரிப்பும் உடனிகழ்ச்சியாக அவன் நினைவில் தோன்றியது. 'தின்பதற்கு மட்டுமல்லா தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள் என்று கவியின் வருணனைக்கு நிதரிசனம் போன்ற அவளுடைய முல்லையரும்புப் பற்களை அவனால் மறக்க முடியவில்லை. அவள் பேசுவதும் இதழ்களைத் திறந்து சொற்களை ஒலிப்பதும் அழகாயிருந்தது என்றால், சிரிப்பது இந்த அழகுக்கு வேறு இணையில்லை என்று நிச்சயமாக உறுதிப்படுத்துவதாய் இருந்தது. சித்திரைப் பொருட்காட்சியில் அவள் ஆடிய நடனமும் அந்த நடனத்துக்குத் தான் அவசியம் வரவேண்டும் என்று அவளே சொல்லியனுப்பியதும், மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழகில்லேன்' என்று உள்ளம் உருகப் பாடி ஆடியதும், ஆட்ட முடிவில் தன்னைச் சந்தித்துப் பேசியதும் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவனைத் தயங்கி நிற்கச் செய்தன.

'நான் கல்லூரியில் விரிவுரையாளனாக வேலை ஏற்றுக் கொண்டு மதுரையைவிட்டு வெளியூர்போகிறேன் என்று சித்திரைப் பொருட்காட்சியில் நாட்டியம் முடிந்தபின்பு அவளைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோதே அவளிடம் சொல்லியிருக்கலாம். என்ன காரணத்தாலோ அன்று அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை.

அங்கே அவளுடைய வீடு இருக்கும் அந்தச் சிறிய தெருவில் நுழைந்து வெளியேறினாலே தெரிந்து மனிதர்கள் யாராவது பார்த்து ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு போவார்களோ என்ற கூச்சமும், தயக்கமும் ஒருபுறம் இருந்தாலும் இறுதியில் அவையும் தோற்றன. கடைசியில் இனம் புரியாத அந்தப் பாசம் வென்றது. அவனுடைய கால்கள் அவனை அறியாமலே அந்தத் தெருவுக்குள் அவனை இழுத்துக் கொண்டு போயின. அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்து அவளிடம் எண்ணி இரண்டே இரண்டு நிமிஷங்களில் நாலு வார்த்தை சொல்லிக் கொண்டு புறப்பட்டு விடுவதென்று தீர்மானித்திருந்தான் அவன். பாதித் தொலைவு நடந்ததும் வந்த வழியே திரும்பிச் சென்று விடலாமா என்று கூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால் கால்கள் அவனோடு ஒத்துழைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/191&oldid=595193" இலிருந்து மீள்விக்கப்பட்டது