பக்கம்:பொன் விலங்கு.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 பொன் விலங்கு

ஒன்பது மணி சுமாருக்குத் தம்முடைய பெட்டிப் படுக்கை முதலிய பொருள்களோடு முதல்நாள் கூறியிருந்தபடி தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன் சத்தியமூர்த்தியோடு அந்த அறையில் வசிக்க வந்து சேர்ந்து கொண்டார். மூன்றாவது ஆளாக வேறு யாரையும் உடன் சேர்த்துக்கொள்ளாமல் தாங்கள் இரண்டு பேர் மட்டுமே அந்த அறையில் இருந்து கொண்டால் என்ன என்பதைப் பற்றி இருவரும் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தார்கள். இருவரும் தலைக்கு எட்டு ரூபாய் அதிகம் கொடுக்க நேர்ந்தாலும் இடம் தாராளமாயிருக்குமே என்று எண்ணினார்கள் அவர்கள்.

இரண்டாவது நாளாகிய அன்று கல்லூரியில் அவன் ஒரு வகுப்புக்குச் செல்ல நேர்ந்தது. டயம் டேபிள்' (பாடவேளை). 'ஸ்ெலபஸ்' (பாடத்திட்டம்) ஒன்றும் வகுத்து முடிக்கவில்லை யானாலும், கல்லூரி முதல்வரின் கையொப்பமிட்ட சர்க்குலர்' (சுற்றறிக்கை) ஒன்று அவனுக்கும், வேறு சில ஆசிரியர்களுக்கும் பாட வேளை குறிக்கப்பட்டு அனுப்பப் பெற்றிருந்தது. புதிய ஆசிரியர்களில் சத்தியமூர்த்தி ஒருவனுடைய பெயர்தான் அன்று இருந்தது. அவன் அந்த வகுப்புக்குச் சென்றான். பி.ஏ. முதலாண்டு மாணவர்கள் அறுபது எழுபது பேர் ஒரு ஹாலில் அடைந்து கிடந்தார்கள். வகுப்பின் வலது பக்கமாக முதல் மூன்று பெஞ்சுகளில் மட்டும் மாணவிகள் உட்கார்ந்திருந்தனர். மற்ற எல்லாப் பெஞ்சுகளிலும் மாணவர்கள் இருந்தார்கள். பல்வேறு பாடப்பிரிவுகளையும், க்ரூப்களையும் சேர்ந்த எல்லாமாணவர்களும் அங்கிருந்ததனால் ஒரு மணிநேரப் பொழுதுக்கு என்ன பாடம் நடத்தி அவர்கள் இதயமும் செவிகளும் நிறையச் செய்ய முடியுமென்று சத்தியமூர்த்தி சிந்தித்தான். மாணவர்களும் புத்தகம் ஏதும் கொண்டு வந்திருப்பதாகத் தெரியவில்லை. முதன் முதலாக ஒரு வகுப்புக்குள் நுழைந்து சும்மா உட்கார்ந்திருப்பதையும் அவன் விரும்பவில்லை. முதல் வரிசையில் பெண்கள் பகுதியில் உட்கார்ந்திருந்த பூபதியின் மகள் பாரதி தன்னிடமிருந்த ஆங்கிலக் கவிதைத் தொகுதி ஒன்றைத் தானாகவே அவனிடம் கொண்டு வந்து கொடுத்து, இதில் ஏதாவது ஒரு பாடலை விளக்குங்கள் சார்' என்றாள். அவனுடைய மனநிலையைப் புரிந்து கொண்டு தானாகவே தயாராக எடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/256&oldid=595337" இலிருந்து மீள்விக்கப்பட்டது