பக்கம்:பொன் விலங்கு.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 * * - பொன் விலங்கு

சார்த்திக் கொள்ளும் கையும் தொந்தியும் தொப்பையுமாக வந்தவர் அசடு வழியச் சிரித்துக் கொண்டிருந்தார். அம்பு பாய்வது போல் வீட்டுக்குள் நுழைந்து கூடத்தில் நிற்காமலே விறுவிறுவென்று நடந்து போய் மாடிப்படி ஏறிவிட்டாள் மோகினி, நேரங்கெட்ட நேரத்தில் ஆண் பிள்ளைகளை உட்கார்த்தி வைத்துப் பேசிக் கொண்டு அம்மா கொட்டமடிப்பதை அவள் மனம் வெறுத்தது. பின்னாலேயே அவளைத் தொடர்ந்து அம்மாவும் படியேறி வந்தாள். 'இந்தா பாருடி உனக்குத்தான் சொல்றேன். பையனை இட்லி பலகாரம் வாங்கியாறச் சொல்லி அனுப்பு, வந்தவங்களுக்குக் கொடுக்கணும். இந்த நேரத்திலே இங்கே மாடியிலே தனியா என்ன கிழிக்கப்போறே? கீழே வந்து உட்கார்ந்து மனிசாளோட மனிசாளா இரேன்...' -

மோகினி பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்துக் கொண்டு மனஅழுத்தத்தோடு இருந்தாள்.

'நீ ஏண்டி இப்படி இருக்கே? பணமும் மதிப்பும் உள்ள பெரிய மனுசாள் வந்து மணிக்கணக்காகக் காத்திருக்காங்க. நான் படிச்சுப் படிச்சுச் சொல்றேன். குத்துக் கல்லாட்டமாச் சும்மா இருக்கியே... கல்யாணத்துக்கு ஆடனுமின்னு பேச வந்திருக்காரு. 'முழுசா அஞ்சு நூறு ரூபா நோட்டை எடுத்து அட்வான்ஸ்ா வச்சிக்குங்க'ன்னு கொடுத்திருக்கிற மனிசாளிட்டே ரெண்டு வார்த்தை சிரிச்சுப் பேசிட்டாத்தான் என்ன குறைஞ்சு போவுதாம்?"

செய்ய விருப்பமில்லாத காரியத்தைச் செய்வதற்காகக் கதறி அழுகிற மனத்துடனும் செய்தே தீரவேண்டுமென்று கட்டாயப் படுத்தப்படுகிற அவசியத்துக்காகக் கீழிறங்கும் கால்களுமாக அம்மாவுடன் படிகளில் இறங்கினாள் அவள், கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் பொய் என்பது ஒரு பகுதியாயில்லை, பொய்யின் வாழ்க்கையில்தான் கண்ணாயிரம் ஒரு பகுதியாயிருக்கிறார் என்று மோகினி அறிந்திருந்தாள். -

'உங்கள் வீட்டுக் கல்யாணத்தில் தன் பெண்தான் நாட்டிய மாடனும்னு முத்தழகம்மாளுக்கு ஆசை என்று அங்கே கலியாண்ம் நடக்கிற பிரமுகர் வீட்டில் பேசியிருப்பார். இங்கே வீட்டில் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/276&oldid=595381" இலிருந்து மீள்விக்கப்பட்டது