பக்கம்:பொன் விலங்கு.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 பொன் விலங்கு

இங்கே கொண்டு வந்து தள்ளினார். அதனால் என் இதயத்தில் தளர்ச்சி வந்து உங்களைத் தொழுகிற தொழுகையை நான் இன்னும் நிறுத்திவிடவில்லையே?"

'அப்படியான்ால் மனம் ஒப்பி இந்த நரகத்துக்கு நீ ஏன் வந்தாய்?" -

"சொர்க்கத்துக்கு அழைத்துக்கொண்டு போக நீங்கள் இன்னும் அருகில் நெருங்கி வரவில்லை. நீங்கள் இல்லாத போது, பாவிகள் என்னைப் பயமுறுத்தி, மிரட்டி இங்கே கொண்டு வந்து தள்ளியிருக்கிறார்கள்.

நான் விரும்பியா இந்த நரகத்துக்கு வந்தேன்? எனக்கு உங்களைத் தவிர வேறு உலகம் இல்லை. இந்த நிமிஷமே-வெளியே பூட்டியிருக்கிற இந்தக் கெளரவமான சிறைக் கதவைத் திறந்து விட்டு உங்கள் வலது கரத்தை முன்னால் நீட்டி என்னைக் கைப்பற்றி அழைத்துச்செல்லுங்கள். நான் உங்கள் வழியில் நடந்து வரத்தயார். ஆனால் என்னை அழைத்துப் போகிற உங்களுக்கு நானே அதன்பிறகு ஒரு பெரிய தளையாகிவிடுவேன். ஜமீன்தாருடைய ஆட்கள் உங்களைக் கருவறுக்க வேண்டுமென்று துரத்திக் கொண்டு புறப்படுவார்கள்.

வசந்த சேனையும், மாதவியும் வாழ்ந்த காவிய காலத்தில் நாம் வாழவில்லை. ஆனால் அதே உயரிய ஆசை எனக்கும் உங்களுக்கும் இருக்கிறது. நம்மைச்சுற்றியிருக்கிற உலகில் எல்லாத் துன்பமும் உண்டு. இன்றைய உலகத்திலோ என்னுடைய பழிகள்நான் பிறந்த இடத்தின் பழிகள்-எல்லாம் விட்டுவிடாமல் ஞாபகப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. என் கலையை உலகம் அங்கீகரிக்கும். பிறப்பை அங்கீகரிக்குமா, அன்பரே?"

“வழிபாட்டுக்கு உரிய தாமரைப் பூக்கள் சேற்றில்தான் பூக்கின்றன. வாசனை மிகக் சந்தன மரம் மண்ணில்தான் முளைக்கிறது! பிறப்பு எல்லா உயிர்க்கும் ஒன்று. சிறப்புத்தான் வேறுவேறாக வந்து வாய்க்க முடியும்'

“பயத்தையும் நிராதரவையும் தவிர என்னைப் போன்ற பேதையின் வாழ்வில் வேறென்ன சிறப்பு இருக்க முடியும்?..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/484&oldid=595734" இலிருந்து மீள்விக்கப்பட்டது