பக்கம்:பொன் விலங்கு.pdf/495

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 493

இதன் தெருக்களையும் பார்த்தால் இந்த ஊரே இருந்தாற்போல் இருந்து மங்கலம் இழந்து விதவையாகி விட்டாற்போலத் தோன்றுகிறது குமரப்பன் பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும்போதே மிகவும் வேண்டியவர் யாரையோ இழந்து விட்டதுபோல் மனம் தவித்தது" என்று சத்தியமூர்த்தி நண்பனிடம் கூறினான். நண்பர்கள் இருவரும் சிறிது நேரம் பூபதியின் பெருந்தன்மையைப் பற்றியும் விமான விபத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு சத்தியமூர்த்தி உறங்கச் சென்றான். குத்துவிளக்கு வேலையை உதறித் தள்ளிய பின்பு சில வட நாட்டு ஆங்கில இதழ்களுக்குத் தன் விருப்பத்துக்கிசைந்த கருத்தினைத் தன்னுடைய அபிப்பிராய சுதந்திரத்துக்குப் பங்கமில்லாத முறையில் கார்ட்டூன்களாக வரைந்து அனுப்பி அதற்கு மட்டும் சன்மானத் தொகையைப் பெறும் வழக்கத்தைக் குமரப்பன் கடைப்பிடித்து வந்தான். ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் குமரப்பனை அந்த வாரத்தின் முந்திய ஐந்து ஆறுதினங்களில் வெளியான தினப் பத்திரிகைகளின் குவியல்களுக்கு நடுவேதான் பார்க்கமுடியும். அவற்றைப் படித்துக் கார்ட்டூன்களுக்குக் கருத்தைத் தேடி எடுப்பான் அவன். - - - -

பகலில் 'குமரப்பன் ஆர்ட்ஸ் என்ற விளம்பரக் கலைக் கடையை கவனிக்க வேண்டியிருந்ததனால் இரவில்தான் அவனுக்குக் கேலிச் சித்திரங்கள் வரைய நேரம் கிடைக்கும். அவன் ஒரு பிறவிக் கலைஞன். இந்த உலகத்தைக் குறும்புத்தனமான கார்ட்டுன் கண்களால் பார்த்துப் பார்த்து இரசிக்கிற சுகத்தை அவனால் ஒருபோதும் இழக்கவே முடியாது. அதனால் 'குமரப்பன் ஆர்ட்ஸ் கடையில் போர்டுகளும், டிசைன்களும், ஸ்லைடுகளும் எழுதிக் கொடுப்பதன் மூலம் வருமானம் வந்தாலும்கூட அவனால் கார்ட்டுன் வரையாமல் சும்மா இருக்கவே முடியாது.போர்டுகளும் டிசைன்களும் வரைந்து சம்பாதிப்பதனால் அவன் திருப்திப்பட முடியும். ஆனால், கார்ட்டூன்களை வரையாவிட்டாலோ அவனால் சந்தோஷப்படவே முடியாது. அவனுடைய பிறவிக் கலைக்குணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/495&oldid=595746" இலிருந்து மீள்விக்கப்பட்டது