பக்கம்:பொன் விலங்கு.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 581

விருட்டென்று கீழே இறங்கித் தம்முடைய ஆத்திரத்தின் அளவு தெரியும்படி கார்க் கதவை எவ்வளவு பலமாக ஓங்கி அடைக்க முடியுமோ அவ்வளவு பலமாக ஓங்கி அடைத்துவிட்டு உள்ளே போய்விட்டார். மறுபுறமாக வந்து மோகினி கீழே இறங்குவதற்காகக் கார்க் கதவைத் திறந்துவிட்டு விலகி நின்று கொண்டார் கணக்குப்பிள்ளைக்கிழவர்.மோகினி பயந்துகொண்டேகாரிலிருந்து இறங்கும் புள்ளி மானாகக் கண்ணிர் சிந்தியபடி கீழிறங்கினாள். கண்ணாயிரமும் கணக்குப்பிள்ளைக் கிழவரும் பட்டுப்புடவை மூட்டையைத் தூக்கிக்கொண்டு பின்னால் நடந்தார்கள். ஜமீன்தார் வாங்கிக் கொடுத்த பூப் பொட்டலம் காருக்குள்ளேயே கிடந்தது. டிரைவர் அதை எடுத்துக் கொண்டு பின்னால்-ஓடிவந்து மோகினியிடம் கொடுக்க முயன்று அவள் அதை வாங்கிக் கொள்ளாமல் வேகமாக நடந்துவிடவே கண்ணாயிரத்திடம் கொடுத்துவிட்டுச் சென்றான். தனக்குப் பின்னால் கண்ணாயிரமும், கணக்குப்பிள்ளைக் கிழவரும், பூவுடனும், புடவை மூட்டையுடனும் வருகிறார்கள் என்ற ஞாபகமே இல்லாமல் புயலாக உள்ளே விரைந்து கொண்டிருந்தாள்மோகினி. எதிரே வந்த பாரதி "புடவைக்கடைக்குப் போய்விட்டு வந்தீர்களா அக்கா..." என்று தொடங்கி முக மலர்ச்சியோடு ஏதோவிசாரித்ததற்கும்கூடநின்று பதில் சொல்கிற மன நிலையில் அவள் அப்போது இல்லை. மோகினி ஏன் பதில் சொல்லாமல் போகிறாள்? பட்டுப்புடவையை வாங்கப்போன இடத்தில் ஜமீன்தாருக்கும் இவளுக்கும் ஏதாவது சண்டையோ என்னவோ? அழமாட்டாத குறையாகக் கண் கலங்க நடந்து போகிறாளே? பாவம்' என்று தனக்குள் நினைத்தாள் பாரதி. மோகினியைத் துரத்திக்கொண்டு போவதுபோல் புடவை மூட்டையும், பூப்பொட்டலமுமாகக் கணக்குப்பிள்ளைக் கிழவரும் கண்ணாயிரமும் பின்ன்ால் போவதைப் பார்த்து, இவர்கள் போய் அவளிடம் இன்னும் ஏதோ வயிற்றெரிச்சலைக்கிளறப்போகிறார்கள் என்று பாரதி நினைத்துக்கொண்டாள். அவள் நினைத்தபடியே நடந்தது. அடுத்த அறையில் மோகினி கண்ணாயிரத்திடம் சீறி விழுவதைத் தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்தே ஜன்னல் வழியாகப் பார்த்தாள் பாரதி. அந்தக்கணக்குப்பிள்ளைக் கிழவர் அதிகாரத்துக்கு நடுங்குவதையும் பயந்து சாவதையும் பார்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/583&oldid=595843" இலிருந்து மீள்விக்கப்பட்டது