பக்கம்:பொன் விலங்கு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - - பொன் விலங்கு

இருந்தது. அந்த இரயில் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்துக்கு வரவேண்டிய நேரத்தைக் கடந்து இரண்டு-இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்திருந்ததனால் மதுரைக்குப்போய் இறங்கும்போது ஏறக்குறைய விடிகிற நேரமாகி விடுமென்று தோன்றியது. வண்டியில் கூட்டமே இல்லை. நிலையத்தில் அந்த இரயிலுக்காகக் காத்திருந்தவர்கள் தொகையும் அதிகமில்லை. பிளாட்பாரத்தில் இரயில் வந்து நிற்கும் வேளைகளில் இந்த நிலையத்தில் வழக்கமாகக் கேட்கும் மலைப்பழம் விற்பவர்களின் கூக்குரல்கூட அப்போது ஏறக்குறைய இல்லாமல் ஓய்ந்து ஒடுங்கிப் போயிருந்தது. தான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேராக உள்ள ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி மேலே சாமான்கள் வைக்கும் பலகையில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி. முதல்நாள் உறக்கமிழந்து போயிருந்ததால் அதிகச் சோர்வின் காரணமாகப் படுத்தவுடன் தூக்கம் கண்களில் வந்து கெஞ்சிற்று. அந்த நிலையத்தில் அந்த நேரத்துக்குத் தெற்கேயிருந்து வருகிற இரயில் ஒன்று வடக்கேயிருந்து தெற்கே போய்க் கொண்டிருக்கும் இந்த இரயிலை கிராஸ் செய்ய வேண்டியதாயிருந்தது. அதனால் தெற்கே போகிற இரயில் அரைமணி நேரம் கழித்துத்தான் புறப்பட்டது. இரயில் அங்கிருந்து புறப்பட்டது கூடச் சத்தியமூர்த்திக்குத் தெரியாது. அவன் நன்றாக உறங்கிப் போயிருந்தான். நாள் தங்கின விருந்தாளியைப் போல் அந்த இரவு நேரத்துப் பிரயாணிகள் இரயில் சுவாரஸ்யமோ, சுறுசுறுப்போ இல்லாமல் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. மெயில் கெளரவமோ எக்ஸ்பிரஸ் அந்தஸ்தோ இல்லாத அந்த ஏழை பாஸஞ்சர் வண்டி ஏனோதானோ என்று வாழும் விறுவிறுப்பில்லாத மக்களைச் சுமந்தபடி ஏனோதானோ என்று இயங்கியது. -

அப்போது எந்தவிதமான நினைவோ கனவோ உறுத்தாத மனத்தோடு அடித்துப் போட்டமாதிரி நன்றாக உறங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. முக்கால்மணி நேரத்துக்கு மேல் அவனுடைய ஆழ்ந்த உறக்கம் இடையூறின்றித் தொடர்ந்தது. அவன் ஏறியிருந்த பெட்டியில் அவனைத் தவிர வேறு மனித சஞ்சாரமேயில்லை.

ஏதோ ஒரு சிறிய நிலையத்தில் இரயில் நின்று புறப்பட்ட போதுதான் அவன் படுத்திருந்த பெட்டியின் கீழே உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/62&oldid=595884" இலிருந்து மீள்விக்கப்பட்டது