பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 1 04 பொய்ம் முகங்கள் ஆகிவிடுமோ என்று பயந்தார் ஜமீன்தார். ஆனந்த மூர்த்தியும் முன்ஜாக்கிரதையாக அதைத் தவிர்த்துவிட விரும்பினார். ஆகவே தன் வீட்டுப் படியேறியதுமே அடிகளார் சுதர்சனனைப்பற்றி விசர்ரிப்பதை உடனே ஜமீன்தாருக்கு ஃபோன் மூலம் தெரிவித்து விட்டார் ஆனந்தமூர்த்தி. ஜமீன்தாரும் அதைக் கேட்டு உஷாராகி" விட்டார். மர்லைக்குள்ளே சுதர்சனனிடம் வேலைநீக்க. உத்தரவை கொடுத்து அவனை உடன் வெளியே அனுப்பி விடவேண்டும் என்று ஜமீன்தார் தலைமையாசிரியரை விரட்டினார். அருள்நெறி ஆனந்தமூர்த்தியிடம் இரண்டு. மூன்றுமுறை, "சுதர்சனன் இருந்தால் வரச் சொல்லிக் கூப்பிட்டனுப்புங்க-என்று அடிகளார் கேட்டும் ஆனந்த, மூர்த்தி அதை மெல்லத் தட்டிக் கழித்துவிட்டார். இரண்டு மூன்றுமுறை சொன்னதற்குமேல் பொறுமை இழந்துவிட்ட அடிகளார் தன்னுடைய கார் டிரைவரையே. கூப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் சொல்வி அனுப்பினார். டிரைவர் திரும்பி வந்து தனிமையில் இருந்த அடிக ளாரிடம் 'இந்த பங்களாவுக்கு அவரு வரமாட்டாருங்க. ளாம் சாமி! ஸ்கூலுக்குப் பேச வர்ரப்போ சாமியை அங்கே பார்க்கறேன்னாரு-என்று பதிலையும் தெரிவித்து. விட்டான். ஆனந்த மூர்த்தியிடம் சுதர்சனனுக்கு ஏதாவது கடுமையான மனஸ்தாபம் இருக்க வேண்டும் என்று அடிக. ளாருக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. சுதர்சனனைப் பற்றி வந்ததும் வராததுமாகத் தான் இரண்டு மூன்று: தடவை விசாரித்த போதுகளில் ஆனந்தமூர்த்தி பதில் சொல்லாமல் இருந்ததையும் பேச்சை மாற்றியதையும், மழுப்பியதையும் அடிகளார் நினைத்துக் கொண்டார். சுதர்சனனைப் போன்ற ஓர் உண்மையான சுயமரியாதைக் காரனை அடிகளார் நேசித்தார். அனுடைய நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும், தன்மானமும், அச்சமின்மையும், ஏராளமான மற்ற சுயமரியாதைக்காரர்களிடம் அவர். பார்த்திராதவை. தன்னிடமே சுதர்சனன்,மனத்தில் ஒளிவு.