பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி r s 置翰9

இதுக்குப் போயி அதிகார ஆணவம்-சுயமரியாதை அது இதுன்னு என்னென்னமோ பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றேளே?' - - - -

-அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டு வக்கீல் மிரளு வது சுதர்சனனுக்குப் புரிந்தது. சாதாரணமாக எல்லாரும் கேட்கிற-பேசுகிற வழக்கமான நூறு இருநூறு வார்த்தை களை அசட்டுச் சிரிப்போடு உபயோகிக்கிற வரை ஒருவனைப் பற்றிப் பேசாமல் விட்டு விடுவதும், அசாதா ரனமான வார்த்தைகளை உபயோகிக்கிறவனிடம் பயமும் சந்தேகமும் கொள்வதும் இந்திய மத்தியதரவர்க்கத்தில் இயல்பாக இருந்து வருகிறது என்பது அவனுக்குப் புரிந்த விஷயம்தான். ராமாநுஜாச்சாரி ஒரு மத்தியதரவர்க்கத்து வக்கீல். நல்லது, கெட்டது என்று முன்னோர்கள் நியமித்த, வற்றை அப்படியே தொடர்ந்து நல்லது. கெட்டதாக ஏற்றுக் கொள்வதும், விதி, அதிர்ஷ்டம், கடவுள், தெய்வா தினம் எல்லாவற்றையும் கண்ணைமூடிக் கொண்டு நம்புவ துமாக உள்ள ஒரு மனிதர் அவர் என்ப்து சுதர்சனனுக்குப் புரிந்தது. காரண காரியங்களோடு சிந்தித்து நியாயங்களை முடிவு செய்வதைவிட் ஏற்கெனவே தியமிக்கப்பட்டு விட்ட நியாயங்களை அப்படியே ஏற்கிறவராக ராமாநுஜாச்சாரி இருந்தார். அவருடைய அலுவலக அறையில் தடிமன் தடிமனான சட்டப்புத்தகங்கள், லாஜர்னல் பைண்டிங்கு கள், சுவரை மறைக்கும் புத்தக அலமாரிகள் தவிர வேங்கடாசலபதி படம் சாயிபாபா படம், நன்றிமலை நாகானந்த சுவாமிகள் படம், என்று நிறையச் சாமியார்கள் படங்கள் வேறு இருந்தன. தெய்வாதுக்கிரஹம் இருந்தாலொழிய, இந்தக் கேலிலே நீர் ஜெயிக்க முடியாது. நமக்கு நல்ல வேளை லபிச்சிருந்தா எல்லாம் நன்னா முடியும் எல்லாம் உம்ம ராசியைப் பொறுத்த விஷயம்-' - சுதர்சனன் உள்ளுறச் சிசித்துக் கொண்டான். தன்னம்பிக்கையிலும், உழைப்பிலும், முயற்சியிலும் அறவே