பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 I 5 ஜஸ்டிஸ் பார்ட்டி ஆளுங்க பல பேரு அப்படியே இதுக்கு உள்ளாரவும் வந்துட்டாங்க அவசரப் பட்டா ஒண்ணும் ஆகாது. கொஞ்சம் பொறுத்துக்குங்க. நிதானமா எல்லாம் படிப்படியா மாத்திடலாம்' என்றார் அவர். அவர் மேல் மதிப்பிருந்தும் சுதர்சனன் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுத்தான். சாதிகள் இல்லையடி பாப்பா. குல்த்தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்'னு சொன்ன பாரதியார் உங்களுக்கு முன்னாடியே நீங்கசொன்னதை நல்லாச் சொல்லியிருக்காரு * பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே. வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே'ன்னுசொன்ன பாரதி பழைய மேல் வர்க்கத்தையும் காலணி ஆதிக்கம் என்ற வைதிக மனப்பான்மையால் உலகைச் தரண்டிய புதிய பார்ப்பனர்களாய் உலகில் உருவெடுத்த வெள்ளைக்கார வர்க்கத்தையும் இணைத்தே சாடியிருக் கிறான். இன்னும்கூடப் பொருளாதார அடிப்படையில் வர்க்கபேதத்தை நீங்கள் பார்க்கமறுக்கிறீர்கள், உங்களுக்கு வசதியான-நீங்கள் சுரண்டுவதற்கு ஏற்ற ஒரு கோணத்தி லேயே கால் நூற்றாண்டாக வர்க்க பேதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். விமர்சிக்கிறீர்கள். பூணுரல் அணிந்தவர்கள் பிறப்பால் தான் பார்ப்பனர்கள். பூணுரல் அணியாதவர்கள் பலரிலும் பார்ப்பணியம் உண்டு. பூணுால்அணிந்தவர்களிலும் பார்ப்பனியம் இல்லாதவர்கள் உண்டு. சாதிகள் வர்க்கங்கள் அனைத்தும் ஒழிய வேண்டுமே ஒழிய ஒரு சாதி மட்டும் ஒழிந்து மற்றச் சாதிகள் வர்க்கங்கள் நீடிக்கக்கூடாது." - ஐயா அவனுடைய வாதம் இயக்கத்தைப் பலப்' படுத்தப் பயன்படாது' என்றார். அன்று முதல் மெல்ல ஐயாவிடமிருந்து வழி விலகிப் பரந்த சமத்துவத்தையும் மிக விசாலமான அபேதவாதத்தையும் நாடி வருவதற்கு இந்த வாதம் சுதர்சனனுக்குப் பயன்பட்டது. அவனுடைய மனத்தில் உலகளாவிய சுய மரியர்தையும் உலகளாவிய அபேதவாதமும் பதிந்தன. ஐயாவிடம் தயாரானவர்கள்