பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - . 123 பாசத்தோடும் வினாவிய ஒரு வினாவை-அவன் விரைந்து தன் பதில் மூலமாகக் கத்தரித்த விதம் அவருக்கு என்னவோ போலிருந்தது. ஆனந்தமூர்த்தி போன்றவர்களின் வீட்டில் உண்ண உட்கார விரும்பாத அவனுடைய ஜாக்கிரதை உணர்வு அவருக்கு அதில் தெளிவாகத் தெரிவது போலிருந்தது. s "இப்படிப்பட்ட சுரண்டல் பேர்வழிகளின் வீட்டில் தங்குவதும், சாப்பிடுவதும் உங்களுக்கு வேண்டியதுதான். எனக்கு ஒன்றும் அவசியமில்லை என்று சுதர்சனன் தன்னையே குத்திக் காட்டுவது போலவும் அடிகளாருக்குத் தோன்றியது. இனம், மொழி என்பது போன்ற குறுகிய வட்டங்களில் இனிமேல் யாரும் அவனை வலைவீசிப் பிடிக்க முடியாது என்பதும் புரிந்தது. திடீரென்று அவனுக்கு முன்னால் தான் மிகவும் சிறிய பொருளாகி விட்டாற்போல் ஒரு தாழ்வு மனப்பான்மையும் அவருக்கு ஏற்பட்டது. பண் வசதி, ஆள் பலம், புகழ், அந்தஸ்து எதுவுமே இல்லாத சுதர்சனன் மிக மிக உயரத்தில் இருப்பதுபோலவும், அவை யெல்லாம் இருந்தும் தன்னிடம் எதுவுமே இல்லாததுபோல வும் அவர் அப்போது தமக்குத்தாமே உணர்ந்தார். அவர் அவனைக் கேட்டார்: . ー ・ ー . 'சரி இதெல்லாமாவது போகட்டும். ஆதீனப் புலவர்'னு ஒரு வேலை போட்டு ஒரு முந்நூறு ரூபாய் மாசா மாசம் நானே சன்மானம் குடுத்திடறேன். எங்கூட வந்திட லாமில்லியா? இங்கே தமிழ் பண்டிட்டா இருந்து வாங்கின அதே சம்பளத்தை நான் தந்துட்டாச் சரிதானே?" o 'நீங்க சொல் lங்க. ஆனால் அதெப்படிங்க சாத்தியம்? நான் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நீங்கள் இரண்டுங் கலந்தவர். அதனால் ஆதீனத் தலைவர்ங்கிற முறையிலே சைவசித்தாந்தம்-சிவ ஞான சித்தியார்-பரபக்கம். சுபக்கம், கைவல்ய நவநீதம் அது இதுன்னும் பேசுவீங்க. சமய சமயங்களிலே, இங்கர்சால், கார்ல்மார்க்ஸ், லெனின்னும் பேசுவீங்க. என்