பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந ா. பார்த்தசாரதி 199 தப்பித்துக் கொள்ளுகிறார்கள். குற்றவாளிகள் நீதி போதனை செய்வதும், நீதி போதனை செய்ய வேண்டிய வர்கள் குற்றவாளிகளைப்போல் ஒடுங்கி இருப்பதும் ஒரு நாட்டில் எவ்வளவு அபாயகரமான நிலைமை என்பதைச் "சிந்தித்துப் பாருங்கள்.' - அதையெல்லாம் சிந்திச்சுக்கிட்டிருந்தா இப்போ நம்ம காரியம் நடக்காது. வாங்க புறப்படலாம். முதல்லே. நீங்க மெட்ராஸுக்கு வந்தது உங்க டிரான்ஸ்ஃபர் விஷய மாங்கிறதை மறந்துடாதீங்க...' என்று விவாதங்களைத் தவிர்க்க முடியாத மையத்தில் கொண்டுவந்து தடுத்து நிறுத்தினார் சிண்டிகேட் சிதம்பரநாதன். ரகுவும் அதையே சொன்னான். நமக்கு எதுக்குப்பா ஊர் வம்பெல்லாம்? நம்ம காரியத்தை முடிச்சிக்கிட்டுப் போகலாம். கிளம்பு தேசத்திலே கடவுளைத் தவிர லஞ்சம் வாங்காதவன் uJrrrh?”“ -- 'கடவுள் வாங்கறதில்லே. சில இடங்களிலே கடவுளுக் கும் சேர்த்துப் பூசாரி லஞ்சம் வாங்கறானே? எல்லோரும் இப்பிடியே அப்பப்ப அவங்க அவங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை முடிச்சிக்கிட்டுப் பேசாமப்போயிட்டிருந்தாஅப்புறம் சாதுவான யாரும் சகஜமாக இந்த நாட்டைத் திருத்த முடியாது. வேற மாதிரித்தான் திருத்த வேண்டி கயிருக்கும் காட்டிலே தீப்பிடிக்கறப்ப உதிய மரம் மட்டும் வேகாது. சந்தன மரமும் சேர்ந்துதான் வேக நேரிடும். தீ பரவும்போது தீயதுடன் சில நல்லதும் உடனிகழ்ச்சியாக அழியத்தான் அழியும். ஞாபகமிருக்கட்டும்' என்றான் சுதர்சனன். மற்றவர்கள் இதற்குப் பதிலேதும் சொல்ல வில்லை. . - 26 சுதர்சனன் நினைத்ததுபோல உயர்வான நிலையில் .ரகுவோ, ரகுவின் தனிப் பயிற்சிக் கல்லூரியோ இல்லை. ரகு. அவனுடைய அரசியல் தலைவருக்குப் பின்னால் ஒடிக் கொண்டிருந்தான். அவனுடைய அரசியல் தலைவரோ