பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 211 தகவல் தெரிந்தவுடனேயே பத்துப் பேச அட்வான்லோடு தயாராக வந்து காத்துக்கொண்டிருக்கிற பகுதி அது. அங்கே இடம் கிடைப்பது அவ்வளவு சிரமம். முதலில் உள்ளே போய் விசாரித்துக் கொண்டு அப்புறம் அவசியமானால் வந்து பெட்டி படுக்கையை எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளே போய் விசாரித்த சுதர்சனனிடம் பதிலுக்கு ஒரு டஜன் கேள்விகளைக் கேட் டார் லாட்ஜ்காரர். ஒரு டஜன் கேள்விகளுக்கும் பொறுமை யாக மறுமொழி கூறியபின் மூன்றாவது மாடியில் ஓர் அறை ஆயில் ஒரு படுக்கை காலி இருப்பதாகவும்-மாத வாடகை ரூ. ஐம்பது என்றும்-மூன்று மாத வாடகை அட்வான்ஸாக, தந்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. திருவல்லிக்கேணியின் வசதிகள் நகரின் பிற பகுதிகளில் இல்லை என்பதைச் சுதர்சனன் நன்றாக உணர்ந்திருந்தான். கடற்கரை நடந்து போய்த் திரும்புகிற தொலைவில் அருகே இருந்தது. தனிக் கட்டைகளான திருமணமாகாதவர்கள் சாப்பிடுவதற்கு வசதியான "மெஸ்'கள்திருவல்லிக்கேணியில் நிரம்ப இருந்தன. நகரின் எல்லாப் பகுதிக்கும் போய்வர பஸ் வசதிகள் அருகருகே இருந்தன. - - நல்லவேளையாக அவனிடம் அப்போது நூற்றைம்பது ரூபாய் பணம் கைவசம் இருந்தது. மறுபேச்சுப் பேசாமல் நூற்றைம்பது ரூபாயை எடுத்து லாட்ஜ்காரரிடம் நீட்டி னான் அவன். : ‘'எதுக்கும் உங்களுக்குப் பிடிக்கறதா இல்லியான்னு அறையைப் பேர்ய்ப் பார்த்துட்டு வந்துடுங்களேன்' அவசியமில்லை. நீங்க சொன்னாச் சரிதான்'- - திரும்பத் தெருவுக்கு வந்து ரிக்ஷாக்காரனுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டுப் பெட்டி படுக்கையோடு அழகு லாட்ஜுக்குள் நுழைந்த்ான் சுதர்சனன். அழகு லாட்ஜில், விஃப்ட் கிடையாது. மூன்றாவது மாடிக்குப் படி ஏறி நடந்துதான் போக வேண்டியிருந்தது. அறையின் பொது வான பூட்டுக்கு மொத்தம் மூன்று சாவிகள் உண்டு என்றும்,