பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதும் சிந்தனை நின்தனக்கே ஆக்கி" என்பதும் ஒத்த பொருள்தரும் தொடராகும். வாக்கின் செய்கை உயர்ந்த அஞ்செழுத்துக்காக்கி ' என்னும் தொடர்ப் பொருளும் வாக்கு உன் மணிவார்த்தைக் காக்கி : என்னும் தொடர்ப் பொருளும் இயைந்து நிற்றலைக் காண்க. இங்கனம் சொல்லும் பொருளும் ஒத்த நிலை’ யில் இவ்விரு பாடல்களும் ஒத்துக் காணப்படுதலே உற்று நோக்கும்போது, முன்னவரான மணிமொழியார் வாக்கி இனப் பின்னவரான சேக்கிழார் பெருமானர் தழுவி எழுதி' யுள்ளார் என்பது வெள்ளிடைமலையென விளங்குகின்ற தன்ருே ?

இறுதியாக ஓர் இடத்தினையும் காட்டி இந்நூலின இனிதின் முடிப்போமாக.

திருவாதவூரர் திருவாய்மலர்ந்த திருவாசகத்தினில் குலாப்பத்து என்னும் பகுதியுள்ளகை எவரும் அறிவர். அப்பகுதியின் முதற்பாடல்,

ஒடும் கலங்கியுமே உறவென்றிட் டுள்கசிந்த தேடும் பொருளும் சிவன் கழலே எனத்தெளித்து கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன் ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே

என்பது.

இப்பாடலில் வந்துள்ள, 'தேடும் பொருளும் சிவன் கழலே எனத்தெளிந்து ' என்னும் தொடர்ப்

பொருளைத் தம் பெருநூலில் தக்க இடத்தில் அமைத் துப் போற்றிக்கொள்ளவேண்டுமென்ற பெருவிருப்பங் கொண்டனர் போலும் சேக்கிழார் பெருமாளுர் ! அதற் குரிய இடமாக அவர் உள்ளத்தில் உதித்த இடம் சேரமான் பெருமான் நாயனர் வரலாற்றினைக் கூறப் புகும் இடமாகும். காயனர் அரசப் பதவியினே அடைக்