பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92.

" தேடும் பொருளும் சிவன் கழலே ' என்றும், 'தேடும் பொருளும் ஆடும் கழலே ' என்றும் கூறப்பட்டுள்ள தொடரைப்போல இன்மையின், புகலியர்கோன் புனித. மொழியினைத் தழுவி எழுதப்பட்டது என்று கூறுதற் கின்றி, மணிமொழியார் மாசறு மணிமொழிகளைக் கொண்டு பாடப்பட்டதென்பது சிந்தித்தபோது தெளி வாகும் உண்மை யாகும்.

ஆகவே, இதுவரை கூறிவந்த காரணங்களால் சேக்கிழார் பெருமானர் மாணிக்கவாசகரிடத்தும், அவர் யாத்த திருவாசகத்தினிடத்தும் ஈடுபாடு மிகுதியும் உடையவர் என்பதும், திருவாதவூரர் வரலாற்றினை வெள்ளிடை மலேயென விளக்கமுறக் கூருமல்போயி னும் பொய்யடிமை இல்லாத புலவர் புராணத்துச் சைவப் பெருமக்கள் உய்த்து உணர்ந்து கொள்ளட்டும் என்ற முறையில் இலைமற்ை காய்போல் தம் நூலில், இணைத்துப் பேசியுள்ளார் என்பதும், அங்ஙனம் பேசிய தோடு நில்லாமல், திருவாசகத் தொடரையும் பொருளை யும் ஆங்காங்குத் திருத்தொண்டர் புராணத்தில் அமைத் துப் பாடியுள்ளார் என்பதும் புலகிைன்றன. இத்தகைய நூலின எழுதத் தூண்டிய என் பிறவிக்கு வணக்கம் செலுத்த வகையறியாது திகைத்த நேரத்தில் எனக்குத் தெய்வப்புலவராம் சேக்கிழார் பெருமானுர் பாடியுள்ள நேசம் கிறைந்த உள்ளத்தால் நீலம் நிறைந்த மணிகண்டத் சேன் அடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழஎடுத்து தேசம் உய்யக் கிருத்தொண்டத் தொகை முன் பணித்த கிருவாளன் வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை வணங்குவாம் என்ற பாடல் நினைவுவர, அதனையே கூறி இந்நூலினே இனிதின் முடிக்கின்றனன்.

கிருச்சிற்றம்பலம்.