பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பொய்யடிமை இல்லாத புலவர்" யார்?

سمتصممحمام پایهيم ممساسیجیت

தோற்றுவாய்

'திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார் " என்பது திருவாசகத்தைப் பற்றி வழங்கும் தொன்றுதொட்ட பழமொழியாகும். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட கவிகள் அமைந்த நூல் திருத் தொண்டர் புராணம் என்பது உலகறிந்த உண்மை யாகும். முன்னது தோத்திர வடிவில், உள்ளத்தை உருக்கவல்லது. பின்னது தொண்டர் வரலாற்று முறைமையினேக் கூறும் போக்கில் மனத்தைக் கனியச் செய்வது. திருவாசகத்தின் ஆசிரியர் ஆளுடைய அடிக ளார் என்னும் மாணிக்கவாசகர். திருத்தொண்டர் புராண ஆசிரியர் அருண்மொழித் தேவராம் சேக்கிழார் பெருமார்ை. முன்னவர் கி. பி. மூன்ரும் நூற்ருண்டில் திகழ்ந்தவர். பின்னவர் கி. பி. பன்னிரண்டாம் நூற் ருண்டில் விளங்கியவர். ஆகவே, அருண்மொழித் தேவராம் சேக்கிழார் பெருமானர் திருவாதவூரரிடத்தும், திருவாசகத்தினிடத்தும் எந்த அளவு ஈடுபட்டிருந்தனர் என்பதை ஆராய்வதோடு, பொய்யடிமை இல்லாத புலவர் யார் என்பதையும் ஆய்வு செய்வது இந்நூலின் சிறப்புடைக் குறிக்கோளாகும்.

சேக்கிழார் பெருமானர், ஆளுடைய கம்பிகள் திருவாய் மலர்ந்த திருத்தொண்டத் தொகையினையும், நம்பியாண்டார் நம்பிகள் பாடியருளிய திருத்தொண்டர்