பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவந்தாதியினையும் முறையே முதல் நூலாகவும் வழி நூலாகவும் கொண்டு, சார்பு நூலாகப் பெரிய புராணத்தைப் பாடி முடித்தனர். சேவையர் காவலர் திருத்தொண்டர் புராணமாம் பெரியபுராணத்தைத் தவிர்த்து, வேறு ஒரு நூல் செய்ததாகப் புலகைவில்லை. என்ருலும், அன்னருக்கு வாதவூர்ப் பெருமானராகிய மாணிக்க்வாசகரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்பையும், அப்பெருமானர் நூலாகிய திருவாசகப் பொருள்களையும் எவ்வாறு தம் நூலில் இணைத்து, எம்முறையில் பாடி அமைப்பது என்ற எண்ணம் மட்டும் உள்ளத்தில் ஊடுருவி இருந்தது என்பது பெரியபுராணத்தினை ஊன்றி அமைதியுடன் படிக்கும்போது தோன்ருமல் இராது. ஆனால், மணிமொழியாரது வரலாற்றுக்குறிப்பு வெள்ளிடைமலை யென வெளிப்படத் தோன்ருது, இலை மறைகாய் போல மறைமுகமாவே இவரது நூலில் துட்பமாய் அமைந்து, திருவாசக ஆட்சி மட்டும் வெளிப் படையாகத் தோற்றுவித்துக்கொண்டு திகழ்கிறது. இனி, இவ்விரு அமைப்புக்களும் எவ்விடத்தில் எம்முறையில் அமைந்திருக்கின்றன என்பதைக் காண்டோமாக. இங்ங் னம் காண்பதற்கு முன், திருத்தொண்டத் தொகையைப் பற்றிச் சிறிது ஆராய்தல் இன்றியமையாததாகும்.

திருத்தொண்டத்தொகைப் பதிகத்தின் அமைப்பு முறை திருத்தொண்டத் தொகையில் உள்ள திருப்பாடல் கள் மொத்தம் பதினென்று. அவற்றுள் தனியடியார் களைப் பற்றிய குறிப்புக்களை உணர்த்தும் திருப்பாடல் கள் முதல் ஒன்பது பாடல்களும், ஈற்றுப் பாடலாக அமைந்த பதினேராவது பாடலும் ஆகப் பத்துப்