பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள். இடையில் உள்ள பத்தாவது திருப்பாடல் தொகையடியார்களைப் பற்றியே குறிப்பிடும் பாடலாகும். இந்தப் பத்தாவது பாடல் அமைந்துள்ள போக்கினே உற்று நோக்கும்போது, கம்பி ஆரூரர் தம் நுண்ணறிவுத் திறனல் தொகையடியார்களைத் தனித்ததொரு பாடலில் குறிப்பிட வேண்டுமென்ற சீரிய நோக்கங்கொண்டே பாடி அமைத்துள்ளார் என்பது சிறிது ஊன்றிச் சிந்தித்த அளவில் புலனுகிவிடும்.

இங்ஙனம் இருக்கத் திருத்தொண்டத் தொகையில் ஏழாவது பாடலின் தொடக்கமாக அமைந்துள்ள போய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் என்னும் அடியில் உள்ள பொய்யடிமை இல்லாத புலவர் என்பா ரையும் தொகையடியார் எனக் கருதிவிட்டனர் நம்பி யாண்டார் நம்பிகள். நாவலூர்ப் பெருந்தகையாரால் பொய்யடிமை இல்லாத புலவர் என்று குறிப்பிடப் பட்டவர்கள் கடைச் சங்ககாலத்துப் புலவர்களாகிய கபிலர், பரணர், நக்கீரர் ஆதியோர் ஆவர் என்ற கருத்தினே வற்புறுத்த நம்பியாண்டார் நம்பிகள்,

' கரணியில் பொய்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில்கபிலர் பா:ைtநக் க்ார் முதல்நாற்பத் தொன்பது பல்புலவோர் அருணமக் கீயும் திருவால வாய்அான் சேவடிக்கே

பொருள் அமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே ”

என்றும் பாடிவிட்டனர். இவரது போக்கினே ஒட்டி உமாபதியார் தாம் அருளிச் செய்த திருத்தொண்டர் புராண சாரத்திலும்,

பொய்யறியாக் கபிலரோடு பானர் ஆதிப்

புலவோற்பொற் பார்கலைகள் பொருந்த ஒதிச் செய்யுளிடை வளாாசு மதுரம் கல்ல

சித்திரம்வித் தாாமெனத் தெரிக்கும் செம்மை