பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யுடைய கொடைக ளெல்லாம் மன்றன் ஆடல்

மேவியகோன் இருதாளில் விரவச் சாத்திக் கையுடையஞ் சலியினாாய் அருளால் மேலேக்

கருதரிய அமருலகம் கைக்கொண் டாாே. என்று பாடிவிட்டனர்.

பொய்யடிமை இல்லாத புலவர் தொகையடியார் களே ஆவர் என்பதாயின், ஆளுடைய நம்பிகள் அவர் களைத் தனியாடியார்களைக் குறிப்பிடும் பாடலில் இயைத்துக்கூருர். ' தொகையடியார்களைக் குறிப்பிடும் பத்தாவது பாடலில் பொய்யடிமை இல்லாத புலவர்க ளாகிய தொகையடியார்களேக் குறிப்பிட யாப்பு இட ங் தராமையின், முன்னர் குறிப்பிட்டனர்.' என்று சாதிக்க முற்படுவாராயின், அவர்கள் உளம்கொளும் முறையில் ஒருசில கூறுதல் இன்றியமையாததாகும்.

பொய்யடிமையில்லாத புலவர் தொகையடியார் என்பது கருத்தாயின், சுந்தார் ஒன்பதாவது செய்யுளின் இறுதியில் குறிப்பிட்டேனும், பதினேராவது செய்யு ளின் தொடக்கத்தில் குறிப்பிட்டேனும் பாடித் தொகையடியார்களுக்கெனப்பாடி அமைத்த பத்தாவது செய்யுளுடன் இயைபு காட்டிச் சென்றிருப்பர். இங் வனமெல்லாம் செய்யாமல், தனியடியார்களைப் பற்றியே குறிப்பிட்டுப் பாடிவருகின்ற போக்கில் பொய்யடிமை யில்லாத புலவரையும் இணைத்து, அடுத்த எட் டாவது ஒன்பதாவது செய்யுளிலும் தனியடியார் களையே கிளேக் துபாடிக்கொண்டு சென்ருர் ஆதலின், பொய்யடிமை இல்லாத புலவர் நம்பியாண்டார் கம்பிகள் நினைவுப்படி தொகையடியார் ஆகார். நம்பியாரூரர் தொகையடியார்களுக்கெனத் தனித்ததொரு பாடலைப் பாடாது, அத்தொகையடியார்களேத் தமது திருத்