பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

தொண்டத் தொகைப் பாடல்களின் இடையிடையே அமைத்துப் பாடிச் சென்றிருப்பினும், தனியடியார்க ளுடன் இணைத்துப்பேசிய பொய்யடிமை இல்லாத புல வரைத் தொகையடியார் என ஒருவேளை கொள்ளலாம். அதுவும் செய்யாத காரணத்தால், அத்தொடரில் குறிப் பிடப்பட்ட புலவர் தனியடியாரே ஆவார் ; சேக்கிழாருக் கும், 'பொய்யடிமை இல்லாத புலவர், தொகையடியார் அல்லர் தனியடியாரே ஆவர் ' என்பது கருத்தாகும்.

சேக்கிழார் வாக்கும் நம்பியாண்டார் போக்கும்

கம்பியாண்டார் நம்பிகள் பாடியுள்ள நாயன்மார் களின் வரலாற்றுக் குறிப்புக்களை அப்படியே ஒப்புக் கொண்டு, குன்றைப் பிரானர் தம் நூலைப் பாடி முடிப் பவர் அல்லர் என்பது, பெரிய புராணத்தை ஊன்றிப் பயிலுங்கால் நன்கு விளக்கமாகிறது. இதனே உறுதிப் படுத்த ஓர் இடத்தினைக் குறிப்பிட்டால் இக்கருத்து கன்முறையில் வலியுறும் அன்ருே ?

இதுபற்றி நமது கருத்தைச் சிறிது அமர்நீதி நாயனர் புராணத்தில் செலுத்துவோமாக. அமர்நீதி நாயனர், தம் மாட்டுப் பிரமசாரியாய் வந்த இறைவர் வைத்துச்சென்ற கோவண ஆடைக்கு ஈடாகத் தம்மிடம் உள்ள அறுவை கள், அரும்பொருள்கள் பலவற்றையும் தராசுத் தட்டில் இட்டும் நிறைகாணுது நின்ற நிலையில், வேறு வழி இன் றித் தாமும், தம் மனைவியாரும், தம் அருமை மகவும் ஆக மூவரும் தட்டில் ஏறியபோது நிறை காணப்பட்டது. அதுபோது இம்மூவரும் தராசுத்தட்டில் இருந்து கொண்டே பிரமசாரியாக வந்த இறைவரை வணங்கிப் பேறுபெற்ற குறிப்பினை,