பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழுது போற்றியத் துலேமிசை நின்ற நேர் த கிக்கும் வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் முழுதும் இன்னருள் பெற்றுத்தம் முன்தொழு திருக்கும் அழிவில் வான்பதம் கொடுத்தெழுந் தருளினர் ஐயர். என்று பாடி அமைத்தனர் சேக்கிழார் பெருமார்ை. ஆல்ை, நம்பியாண்டார் நம்பிகள் அமர்நீதி நாயனர் வரலாற்றுக் குறிப்பினைப் பாடிய பாடலில், தராசுத் தட்டில் ஏறியவர்கள் அமர்நீதி நாயனரும், அன்னர் மனேவியாரும் மட்டும்தான் என்பதை, மீண்டும் பொழில்பழை யாறை அமர்நீதி வெண்பொடியின் முண்டங்களித்த பிராற்குநல் லூரின் முன் கோவணநேர் கொண்டிங் கருள் என்று தன் பெருஞ் செல்வமும் தன்னையும்தன் துண்ட மதிநுத லா?ளயும் ஈந்த கொழிலினனே. என்று குறிப்பிட்டனர். திருத்தொண்டர் புராண சாரம் பாடிய - உமாபதியார், ஈண்டு நம்பியாண்டார் நம்பிகள் போக்கில் தாம் போகாமல், சேக்கிழார் கருத் தின் போக்கினைத் தழுவி,

பழையாறை வணிகர் அமர் நீதி யார்பால்

பாவுசிறு முனிவடிவாய்ப் பயிலும் நல்லூர்க் குழைகாதர் வந்தொருகோ வனத்தை வைத்துக்

கொடுத்ததனை எடுத்தொளித்துக் குளித்து வந்து தொழிலாரும் அதவேண்டி வெகுண்டு நீர் இத்

தலையிலிடும் கோவனநேர் தாக்கும் என்ன எழிலாரும் பொன்மனைவி இளஞ்சேய் ஏற்றி ஏறினர் வான் உலகுதொழ எறி னரே. என்று கூறியுள்ளார்.

இந்த ஒரு குறிப்புக்கொண்டே சேக்கிழார் பெரு மானர் எதையும் நன்கு சிந்திக்காமலும் ஆராயாமலும் கூறுபவர் அல்லர் என்பதும், நம்பியாண்டார் கம்பிகள்