பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருத்தினே. அப்படியே தழுவிக்கொண்டு செல்பவர் அல்லர் என்பதும், தெற்றத் தெளிய நன்கு புலன கின்றன அன்ருே ? அந்த முறையில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியுள்ள பொய்யடிமை யில்லாத புலவர்க் கும் அடியேன்” என்ற அடிக்கு கம்பியாண்டார் கருதிய பொருளினைக் கருதாமல், அதாவது அவ்வடியில் குறிப் பிடப் பட்டவரை நம்பியாண்டார் நம்பிகள் எண்ணிய படி சங்கப்புலவர்கள் என்று கொள்ளாமல், தனியடியா ராகவே கொண்டுள்ளார் சேக்கிழார் என்று நாம் பின் னர், விளக்கமுற எடுத்துக்காட்டப்படும் காரணங்களைக் கொண்டு முடிவு கட்டலாம் !

நம்பியாரூரரின் அறிவுத்திறன்

மேலும், ஆளுடைய நம்பிகள் 'பொய்யடிமை இல் லாத புலவர்க்கும் அடியேன் ' என்னும் அடியினே எம் முறையில் தனியடியாராகக் கருதினர் என்பதை நிலை கிறுத்த முற்படுவோமாக. கம்பியாரூரர் பழுத்த கல்வி அறிவுடையவர். இவரது கல்விப் புலமை கருதியே இறைவரும் இவரைத் தோழராகக் கொண்டனர் என்ப தைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் தம் நால் வர் நான்மணி மாலே என்னும் நூலில்,

அறிந்து செல்வம் உடையாளும் அளகைப்

பதியான் தோழமை கொண்டு உறழ்ந்த கல்வி உடையானும்

ஒருவன் வேண்டும் என இருந்து துறந்த முனிவர் தொழும்பாவை

துணைவா நினைத்தோ ழமைகொண்டான் சிறந்த அறிவு வடிவமாய்த்

திகழும் நகல்கண் பெருமானே.