பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பது அப்பாடல். இவ்வாறு இருக்கப் பொய் யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்" என்னும் அடி யில் உள்ள 'புலவர்க்கும்" என்பது எங்ங்ணம் தொகை யடியார்க்ளேக் குறிக்கும் ? இவ்வடிவில் உள்ள புலவர்க் கும் என்னும் மொழி தனியடியார்களைக் குறிப்பிடும் அடிகளோடு இணேந்திருப்பதனல், இவ்வடிவில் குறிப் பிடப்பட்ட பொய்யடிமை இல்லாத புலவர் தொகை யடியார் ஆவர் என்ற ஐயம் எங்கனம் எழும் ? ஆகவே, பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் தனியடியாரே என்க. ஆளுடைய கம்பிகளது உள்ளக்கிடக்கையும் இதுவே என்க. ஆல்ை, ஈண்டு ஒர் ஆசங்கை எழக்கூடும். " தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன். ' என்னும் அடி, தொகையாடியார்களைக் குறிப்பதன்ருே? அவ்வடி தனியடியார்களைக் குறிப்பிட்டுப் பாடும் அடி .களுடன் அன்ருே இணைந்து இருக்கிறது ? எனவே, 'பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன். ' என்னும் தொகையடியாரைக் குறிக்கும் அடி தனி யடியார்களைக் குறிப்பிடும் அடிகளில் இணைந்திருப்பதில் இழுக்கொன்றும் இல்லையே ?" என்பதாம். இவ்வாறு ஐயம் எழுதல் இயல்பு. இதற்கு அமைதி கூறவேண்டு வதும் இன்றியமையாததே ஆகும். ' தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் ' என்னும் அடி, ஆளுடைய கம்பிகளது வாக்கு அன்று. ஆரூர்த் தியாகேசர் அன்பு கூர்ந்து எடுத்துக் கூறிய அமுத வாக்காகும். அத னேயே மகுடமாகக்கொண்டு ஏனைய அடிக்கள அமைத்துத் திருப்பதிகத்தைப் பாடி முடித்தனர் பாவலராம் நம்பி யாரூரர். இதனை கயம்படத் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்களும், தாம் பாடியருளிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ்க் காப்புப் பருவத்தில்,