பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பொய்யடிமை இல்லாத புலவர்' என்று கூறமுடியுமா என்பதை நாம் சிறிது சிந்திக்கவேண்டும் அன்ருே ? * பானே சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பதுபோலச் சிவநேசச் செல்வரெனக் கருதக்கூடிய நக்கீரர் ஒருவரது இயல்பைக் கூறிவிட்ட பிறகு, மற்றுமுள்ள புலவர்கள் இயல்பைக் கூறவும் வேண்டுமோ? வேண்டா அன்ற்ே ? இந்தக் காரணத்தாலும் அரன் அன்பும், அடியார் அன்பும் விஞ்சி நிற்கும் குழுவில் சங்கப் புலவர்கள் முற்றும் இணைந்து சிற்பவர் அல்லர் என்பதையும் ஈண்டே யூகித்து உணரலாம். மேலும், சங்கப் புலவர் களில் சிவநெறியினரே அன்றிப் பிறநெறியினரும் இருந்தமை எவருழ் அறிவர். சங்கப்புலவர் குழுவில் திருமால் நெறியினரும் சமண பெளத்த சமயத்தினரும் இணைந்து இருந்தனர் என்பதை நாம் மறந்துவிடுதல்

ه یکی ff-سسiسد:

"அற்ருயின்,பொய்யடிமை இல்லாத புலவர் என்பவர் தனியடியாராயின், அன்னர் யாவர் ? யாரைக் குறிப் பிட்டுச் சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் பொய்யடிமையில்லாத புலவர் ' என்று குறிப்பிட் டுள்ளார் ?' என்று வினவக் கூடும். அவ்விவுைக்கும் விடை ஈண்டே காண்போமாக. பொய்யடிமை இல்லாத புலவர் என்பார் ஈண்டுத் திருவாசகம் என்னும் தேனைப் பொழிந்த மணிமொழியாரே என்க. இவரே பொய் யடிமை இல்லாத மெய்யடிமையுடைய புலவராவார். இதற்குரிய விளக்கத்தினைப் பின்னர்ப் பரக்கக் காண லாம்.

இங்கும் ஒர் ஆசங்கை எழக்கூடும். அது "மாணிக்க வாசகனர் மூவர் முதலிகளான அப்பர், சுந்தரர், சம் பக்தர் ஆகிய மூவர்க்கும் பிற்பட்டவர் என்ற கொள்கை