பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இருக்கின்றபோது, கம்பி ஆரூர் மாணிக்கவாசகரைத் தான் 'பொய்யடிமை இல்லாத புலவர் ' என்று குறிப்பிட்டுள்ளார் என்று எவ்வாறு கூற இயலும் ?” என்பது. திருவாதவூரர் பிற்பட்டவர் என்ற கொள்கை இருப்பதுபோலவே அன்னர் மூவர்க்கும் முற்பட்டவர் என்ற கொள்கையே, ஆணித்தரமான அகப்புறச் சான்று களால் நிலை நிறுத்தப்படுகிறது. முதற்கண் மணிமொழி யார் மூவர்க்கும் பிற்பட்டவர் என்று கூறுவார் காட்டும் காரணங்களை நன்கு அலசி, அவ்வாறு காட்டப்பட்டவை அத்துணைப் பொருத்தமுடையனவகாக் காணப்பட வில்லே என்பதை என் சிற்றறிவுக்கெட்டிய வரையில் எடுத்துக் கூறிப் பின்னர் முற்பட்டவுர் என்ற கொள்கை யினையும் கில் நிறுத்த ஒல்லும் வகையால் முயல்வேகை.

மாணிக்கவாசகர் மூவருக்கும் பிற்பட்டவர் என்று கூறுவார் கூற்றுக்களும் அவற்றிற்குரிய மறுப்புக்களும்

திருவாசகக் கீர்த்தித் திருவகவலில் எண்பத் தொன்பதாவது அடியாகிய கழுமலமதனில் காட்சி கொடுத்தும் " என்னும் அடியினைக் காட்டி, இக் குறிப்பு, இறைவர் திருஞானசம்பந்தருக்குப் பிரம்ம தீர்த்தக் கரையில் காட்சி கொடுத்த நிகழ்ச்சியினைக் குறிப்பதாகும் ' என்பர் ஒரு சிலர். ஆனால், இங்குக் கூறப்பட்ட காட்சி கொடுத்தும்" என்பதனை ஞானசம் பந்தருக்குக் காட்சி கொடுத்தது என்று எவ்வாறு நாம் கொள்ள இயலும் இறைவன் ஆங்காங்குத் திருக்கோயில் கொண்டெழுந்தருளி, அன்பர்கள் யாவர்க்கும் காட்சி கொடுக்கும் இயல்பினன் என்பதே நாம் அறிந்த உண்மை யாகும். ஆகவே, இத் தொடர் சீர்காழிப்பதியில் இறை வன் வீற்றிருந்து அன்பர்கட்குக் காட்சி கொடுப்பவர்