பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

என்ற உண்மைப் பொருளைக் குறிப்பதாகும். இத்துடன் மணிமொழியார் திருவாசகத்தில் பாடியுள்ள பிடித்த பத்தின் தலைப்பில் ει திருத்தோணிபுரத்தில் அருளிய பிடித்த பத்து ' என்று குறிப்பிடப்பட்டிருத்தலினக் காணலாம். மணிமொழியார் தாம் சீர்காழிக்குச் சென்று இறைவன் காட்சியைக் கண்ட பிறகு, இக் கீர்த்தித் திருவகவல் பாடப்பட்டதாகக் கருத்தில் கொள்ள வேண்டி இருத்தலின், அக்காட்சியினை வியந்து "கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் ' என்று இயம்பி இருக் கிருர் என்பது பெறப்படும். இவ்வாறு இவரே இறைவ ர்ை தமக்குக் காட்சியளித்ததை இப் பிடித்தபத்து ஆருவது பாடலில் ' திறவிலே கண்ட காட்சியே ' என்று குறிப்பிட்டிருப்பதையும் நாம் அறிதல்வேண்டும். உண்மையில் 'கழுமலம் அதனில் காட்சிகொடுத்தும்' ஏன்னும் தொடரில் காணப்படுவது திருஞானசம்பக் தர்க்கு இறைவர் அளித்த காட்சியே ஆகும் என்ப தானல், திருஞானசம்பந்தர் பிறந்த பதியும், ஞானப் பால் உண்டு ஞானம்பெற்ற பதியும் ஆகிய அக்கழுமலப் பதியில் சென்று பாடிய மணிவர்சகப் பெருமாளுர், தம் பிடித்தபத்தில் யாண்டேனும் ஒரு செய்யுளில் ஞானசம்பந்தரது அருமைப்பாட்டில் ஒன்றேனும் குறிப் பிட்டிருக்க மாட்டாரோ பல அருஞ்செயல்களைக் குறிப்பிடாமல் போயினும், ஞானப்பால் உண்ட தனையோ, அன்றி உண்பித்ததனையோ உரைத்திருக்க மாட்டாரோ ? இங்கு உணர்த்தாத இக் குறிப்பினைக் கீர்த்தித் திருவகவலில் சென்றுதான உணர்த்த வேண்டும் ஆகவே, ' கழுமலம் அதனில் காட்சி கொடுத்தும் ' என்பதில் குறிக்கப்பெறும் குறிப்பு அன்பர்கட்கு ஆண்டவன் அளிக்கும் பொதுக்காட்சியாக