பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேனும், அன்றி மணிமொழியார்க்குக் காட்டிய சிறப்புக் காட்சியாகவேனும் இருக்கவேண்டுமே ஒழியத் திருஞான சம்பந்தர்க்குக் கொடுத்த காட்சி ஆகாது.

மேலும், இத்தொடர்க்குக் காழி தாண்டவராயர் தமது வியாக்கியானத்தில், 'திருக்கழுமலமான தலத்திலே பிரணவத் திருத்தோணிமேல் எழுந்தருளி மூவுருவும் ஒருரு வெனச் சகல பக்குவ தேவர் அடியார்க்குப் பரம குருவாய் ஒன்ருகக் கண்ணில் இன்புறக் காட்சி அருளும் பெருங் கருணையை அன்பால் காண்க ' என்று விளக்கியுள்ளார். அவரும் திருஞானசம்பந்தரைப் பற்றிய எந்தவிதமான குறிப்பினையும் குறிப்பிடாததைக் கவனித்தல் வேண்டும். திருவாசக உயிருண்ணிப்பத்தின் முதற் செய்யுளில் உள்ள செங்காவலர் பரசும்புகழ் திருப்பெருந்துறை உறைவாய் ' என்ற அடியினைக் காட்டி, ' இங்குச் செங் காவலர் என்பார் திருநெறித் தேவாரம் அருளிச்செய்த மூவர் முதலிகளே' என்று கருதுகின்றனர் பல அன்பர் கள். செங்காவலர் என்பார் எங்ங்னம் மூவர் முதலிகளைத் தான் குறிக்குமோ தெரியவில்லை. இத்தொடரின் பொருள் செம்மையான காவன்மை படைத்த-அதாவது பேசுங் திறன், பாடுக்திறன் படைத்த-பெருமக்கள் என்று கருதப் படுமே அன்றித் தேவாரம் அருளிய பெரியார்கள்தாம் என்பது பெறப்படாது. 'அன்று அன்று. காவலர் என்பார் காவுக்கரசராய அப்பர் பெருமானர். அவரே நாவுக்கரசர் என்றும் சிறப்புப் பெயர் பெற்றவர். ஆகவே, அவரையே மணிமொழியார் இங்ங்னம் குறிப்பிட்டுள்ளார்.” என்று கூறக் கூடும். நாவலர் திருகாவுக்கரசர் என்ருல், அத் திருநாவுக்கரசர் மணி மொழியார் பொருட்டு இறை வர் கரியைப் பரிகளாக்கிய அற்புதத்தைக் குறிப்பிட்டுத் தாம் மணிமொழியார்க்குப் பிற்பட்டவர் என்பதை நாம்