பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதைக்காட்டி, கண்டுப் பிணிதீர்த்தருளி' என்ப தற்கு, " அப்பர் பெருமானுக்கு இருந்த குல் கோயைக் தீர்த்த குறிப்பு" என்று உரை காண்கின்றனர். பிணி தீர்த்தருளி" என்பது கக்ாேர்க்கு உண்டான குட்டிகோயை நீக்கியருளி என்று பொருள் காணவும் துணை செய்யும் என்று என் கொள்ளுதல் கூடாது? அதோடு * பிணி தீர்த்தருளி " என்னும் தொடர்க்கு முன்னுள்ள "பணிவார் ' என்னும் சொல் அமைந்து இருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அச் சொல்லேயும் சேர்த்துப் பொருள் காணும்போது இறைவனே வணங்குபவர்க ளுடைய நோயைப் போக்கியருளி' என்று பொதுப்படக் கூறியதாக ஏன் பொருள் கூறுதல் கூடாது ஆகவே, * பிணி தீர்த்தருளி' என்பது அப்பர் பெருமானுக்குற்ற குலேநோய் க்ேகிய செயலே அன்று. வணங்குவார் கோயைத் தீர்த்தருளி என்பதே பொருள். இப்படிக் கொள்ளுதலே பொருத்தமுடையதாகும். சண்டுக் கூறப் பட்ட பிணி என்பதற்குப் பிறவிப்பிணி " எனப் பொருள் கண்டார் காழி தாண்டவராயர்.

திருவாசகத் திருவெம்பாவை என்னும் பகுதியின் பத்தாவது பாடலில் வரும், ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் " என்பதனேக் காட்டி, ' இறைவனுக் குத் தொண்டர் குழாத்துள் சுந்தரமூர்த்திகளாகிய ஒப் பற்ற தோழன் ஒருவன் உளன் " என்று அவ்வடிக்குப் பொருளும் உரைக்க முன்வருகின்றனர். இச்செய்யுள் செல்லும் பொருள் ஒட்டத்தைக் கண்டால், ஒரு தோழன் தொண்டருளன்" என்ற தொடரில் கொண்டர் களுக்குள் ஒருதோழன் இறைவனுக்கு உள்ளான் என்ற பொருள் தோன்றப் பெருமல், இறைவன், மின்னேயே கம்பித் தொழுவார்க்கு ஒப்பற்ற துணைவன் ஆவான்

2 -