பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற பொருளும், தொண்டர்களின் உள்ளத்தில் இருப் பவன் என்ற பொருளும் பெறப்படுதலைக் காணலாம். இத்தொடருக்கு மற்ருெரு பொருளும் கூறப்படும். அதுபோது தோழன் என்பதைச் தோமும் எனக் கொள்ளல்வேண்டும். அதாவது, தோழம் என்பது ஒரு பேர் எண்ணிக்கையைக் குறிக்கும் சொல்லாதலின், அப் பொருளைக்கொண்டு காணும்போது, சொல்லச் சொல்லக் குறையாத ஒப்பற்ற பேர் எண்ணிக்கைக்கும் மேற்பட்ட பல தொண்டர்களைப் பெற்ற இறைவன் என்பது. ஆகவே, தோழன் தொண்டருளன் என்பது சுந்தரரைக் குறிக்க இடம் இல்லை என்க.

திருவாசகத்தில் கீர்த்தித்திருவகவலில் வரும் எழு பத்து மூன்று எழுபத்து நான்காம் அடிகளாகிய

தேனமர் சோலைத் கிருவா ரூரில் ஞானம் தன்னை நல்கிய சன்மையும்

என்றவற்றைக் காட்டிச் சிவபெருமான் ஆளுடைய கம்பி களாம் சுந்தரமூர்த்திகளுக்குத் திருவாரூரில் ஞானம் அளித்த செயலைக் குறிப்பதாகும் என்பர். இறைவர் சுருதரருக்குத் திருவாரூரில் பரவை நாச்சியாரை அளித்தார் ; இல்லறம் கடத்த இனிய பல உதவிகள் புரிந்தார் என்று அறிந்துள்ளோமே அன்றி, ஈண்டு கம்பியாரூரர்க்கு ஞானம் அளித்தார் என்று நாம் உணர்ந்தோம் இல்லை. உண்மையில் கந்தரருக்கு ஞானம் கல்கிய இடம் திருவதிகை வீரட்டானம் என்று வேண்டுமானல் காம் கூறலாம். ஆண்டுத்தான் இறை வர் இவர் தலையில் திருவடியைச் சூட்டி அருளியுள்ளார். இது ஞானோபதேசத்தின்போது செய்யப்படும் திருவடி தீட்சை போன்றதன்ருே ? மேலும், ஆண்டு இறைவர்