பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் - முன்னுரை

ஆளுடைய கம்பிகளாம் நாவலூர்ப் பெருமாளுர், தம் திருத்தொண்டத் தொகையில் குறிப்பிட்டுள்ள பொய் யடிமை இல்லாத புலவர் என்பார் யார் ? என்பதைப் பற்றிய ஆசங்கை பல அறிஞர் உள்ளத்தில் ஊடுருவி யுள்ளது. ஒரு சிலர் அப்புலவர்கள் சங்ககாலச் சான்ருேர் என்பர். வேறு சிலரது எண்ணம் திருவாசகமாம் தேசினப் பொழிந்த திருவாதவூரராம் மாணிக்கவாசகர் என்பது. யான் பின்னவர் கருத்துக்குப் பெரிதும் உடன்பட்டவன். என் கருத்துக்குப் பெருந்துணையாகச் சேக்கிழார் பெரு மானுர் மொழிகளேசி சிக்கெனப் பிடித்து, இவ்வாய்வு நூலை எழுதியுள்ளேன். மேலும், என் கருத்தின் நிறுவிக்காட்ட அகச்சான்றுகளையும், புறச்சான்றுகAாயும் ஆங்காங்கு

எடுத்துக் காட்டியுள்ளேன்.

இந்த அளவில் இந்நூ லினே கிறுத்தாது அருண் மொழித் தேவராம் சேக்கிழார் பெருமார்ை, தம் நூலாகிய பெரிய புராணத்தில் திருவாசகத்தினின்று எடுத்து ஆண்டுள்ள சொற்களேயும், தொடர்களேயும், கருத்துக் களேயும் எடுத்துக் காட்டியுள்ளேன். இந்நூலே அறிஞர்கள் கண்ணுற்று, யான் இத்தகைய கொண்டில் இறங்கி, மேன்மேலும் உழைத்தற் பொருட்டு, எனக்கு ஆக்கமும் ஊக்கமும் உதவுமாறு பெரிதும் வேண்டிக் கொள்கிறேன்.

இந்நூலே நன்கு படித்து, தம் உள்ளக் கருத்தினே உவகையுடன் எழுதி உதவிய பேரறிஞர் பெருமக்களுக்கு என் நன்றியறிதலான வணக்கத்தினேப் பணிவுடன் அறி

வித்துக் கொள்கின்றேன்.

பா. து. & .