பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் மூவர் முதலிகட்கும் பிற்பட்டவர்

என்று கூற இயலாது.

மணிமொழியார் பாடிய திருக்கோவையாரில் வர

குணனேப் பற்றிய குறிப்பு வருகின்றது. அவையே,

மன்னவன் தெம்முனைமேல் செல்லும் ஆயினும் மாலரியே நன்னவன் தேர்புறத் தல்கல்செல் லரது வாகுனனும் தென்னவன் எத்தசிற் றம்பலத் தான் மற்றைத் தேவர்க்செல்லாம் முன்னவன் மூவலன் நாளும்மம் முேர்செய்வம் முன்னலளே புயலோங் கலர்சடை யேற்றவன் சிற்றம் பலர்புதமும் மயலோங் கிருங்களி யான வாகுiன் வெற்பின்வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமும் காட் டிவரும் செயலோங் கெயில்எரி செய்தபின் இன்ருேர் திருமுகமே.

என்பன.

இங்குவந்துள்ள வரகுண பாண்டியனேக் காட்டி, இவன் 9-ஆம் நூற்ருண்டினன் என்று கூறியும், ஏத்து சற்றம்பலம் என்றும், சிற்றம்பலம் புகழம் என்றும் இங்குப் பாடப்பட்டிருத்தலின், தம் காலத்தில் அவன் இருந்து புகழும் நிகழ்காலச் செயலாகக் குறிப்பிட்டிருக் கின்றனர் என்று காட்டியும் மணிமொழியார் 9-ஆம் நூற்ருண்டில் திகழ்ந்தவர் என்று கூற முன்வருவார். இங்குக் கூறப்பட்ட வரகுணன், ஒன்பதாம் நூற்ருண்டு வரகுணன் அல்லன். இங்குக் கூறப்பட்டவன் ஒன்பதாம் நூற்ருண்டிற்கும் முற்பட்டவனவான். இதனே மறை மலையடிகளார் தக்க சான்றுகொண்டு கிறுவியதை அவர் எழுதிய மாணிக்கவாசகர் கால ஆராய்ச்சி என்னும் நூலில் கண்டு தெளிவோமாக.

மற்றும் சிலர், திருவாசகத்தில் பண்டைத் தோண்ட ரோடும் என்பது யாத்திரைப் பத்தில் வருதல் கொண்டு,