பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

ஈண்டுப் பண்டைத் தொண்டராவார் திருஞான சம்பந்தர், கிருநாவுக்கரசர், சுந்தரர் போன்ருர் என்று: பொருள் கண்டு, மணிமொழியார் அம்மூவர்க்கும் பின்ன வர் என்று சாதிக்க முன்வருவர். பண்டைத் தொண் டர்கள் அவர்களாயின், மணிமொழியார் அவர்களே வெளிப்படையாகக் குறிப்பிடுதல் வேண்டும். அங்ங்ணம் அம்மூவர் பெருமக்களைக் குறிப்பிடாமல், தம் நூலகத்து மூவர் முதலிகளாலும் மற்றும் உள்ளவர்களாலும் பாராட்டப்படும் பழம் பேரும் தோண்டர்களாகிய கண்ணப்ப நாயனரையும் சண்டேசுரரையும் குறிப் பிட்டுப் பாடியுள்ளார்.

இதனேக் கீழ்வரும் திருவாசகப் பாடல்களே கொண்டு அறியலாம்.

f 曝

பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கச் செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம் விருப்புற்று வேடனுர் சேடறிய மெய்குளிர்ந்தங் கருட்பெற்று நின்றவா தோளுேக்கம் ஆடாமோ என்ற பாடவில் கண்ணப்ப நாயனரையும்,

தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிாண்டும் சேகிப்ப ஈசன் கிருவருளால் தேவர்தொழப் பாதகமே சோடி பற்றினவா தோனுேக்கம்

என்ற பாடலில் சண்டேசுர நாயனரையும் குறிப்பிட் டிருப்பதைக் காண்க.

அவ்விருவர்களேயும் அவர்களுக்கு முன்னிருந்த அடி யவர்களையும் சுட்டிப் பண்டைத் தொண்டரொடும் என்று கூறியருளினர் என்பதே அத்தொண்டர் என்னும் சொல்லுக்குரிய பொருளாகும். அப்பெர்ருளுடன்,