பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

ஒருசிலர் திருவாசகத்தில்,

மன்னு மாமலை மகேந்திரம் அதனில் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும் என்றும்,

ஆகமமாகி அண்ணிப்பான் காண்க என்றும்,

t is - - - ... ; ; f மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்

என்றும், ஆகமத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பது போலத் தேவாரத் திருமுறைகளில் குறிப்பிடாமையின், தேவார ஆசிரியர் காலத்துக்கு மணிமொழியார் பின்ன வர் என்று கூற முன் வருவர்.

தேவார திருமுறைகளில் ஆகமத்தைப் பற்றிய குறிப்பு இன்று எனக் கூற இயலாது.

ஆளுடைய பிள்ளையார்,

ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கதம் என்றும்,

தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் என்றும்,

' ஆகமச் செல்வளுாை !” என்றும், அப்பர் பெருமானர்,

இணையி லா இடை மாமரு கில்எழு பணையி லாகமம் சொல்லித்தன் பாங்கிக்கே என்றும்,

அண்டனை அண்டர் தமக் காகம

நூல்மொழியும் ஆதியை என்றும், ஆளுடைய கம்பிகள்,