பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

கத்தில் அவர்களைப் பற்றிக் குறிப்பிட ஏது இல்லாமல் போயிற்று. -

இத்துடன் கலையார் அரிகே சரியாய் போற்றி " என்னும் போற்றித்திருவகவலில் வரும் அடியினைக் காட்டி, ஈண்டு அரிகேசரி என்பது ஒரு தலத்தின் பெயர். அத்தலம் அரிகேசரி மாறவர்மன் என்ற பாண்டிய மன்னனல் உண்டாக்கப்பட்டது. அம் மன்னன் காலம் கி. பி. 7-ஆம் நூற்ருண்டு ஆதலின், அவன் காலத்திய கோயிலில் உள்ள இறைவனே என்ற குறிப்பில் அரிகேசரி யாய் என்று போற்றினர் என்று காட்டி, மணிமொழியார் கி. பி. 7-ஆம் நூற்ருண்டிற்குப் பிற்பட்டவர் என்பதை கிலேகாட்ட முற்படுவார். ஆனல், அரிகேசரியாய் என்ப தற்கு அரிகேசரி என்னும் பாண்டி மன்னல்ை இயற்றப் பட்ட கோயிலில் உள்ளவனே என்பது பொருள் அன்று என்பது, காழி தாண்டவராயர் எழுதிய திருவாசக வியாக் கியானம் என்னும் உரை நூலால் நன்கு விளங்குகிறது. அவ்வுரையில், ' பிரகலாதன் அன்புக்காக இரணியனைக் கொல்லத் தூணின்கண் வந்த நரசிம்மாவதார மகா விட்டுணு, இரத்த உன்மத்த வெறியால் மேலொரு கடவுள் இல்லே எனச் சிவனே மறந்த மயக்கத்தை நிக்கிரகம் செய்யும் பொருட்டுக் கேசரியாக எழுந்தருளிய நாதனே உன் அடிமையை இரட்சிக்க ' என்று எழுதப் பட்டதைக் கானும்போது, அரிகேசரி என்பது ஒர் ஊரின் பெயர் அன்று என்பது பெறப்படுகிறது. அரி கேசரி என்பது ஒர் ஊரின் பெயர் என்ற நினைவே காழி தாண்டவராயருக்கு வராமையை ஈண்டு நாம் கூர்ந்து கவனித்தல் வேண்டும்.

இவ்வாறு இருப்பதை உணர்ந்தும், அரிகேசரியாய்' என்பது பல தலங்களைக் குறிப்பிட்டுவரும் போக்கில்