பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

மணிமொழி கூறிக்கொண்டு வருதலின், அரிகேசரி என் பது தலமே அன்றி வேறன்று' என்று சாதிக்க முன்வர லாம். மணிமொழியாருக்குத் தலங்களைக் குறிப்பிட வேண்டும் என்ற நோக்கம் இருப்பின், தாம் கூறிக் கருதிய தலங்கள் யாவற்றையும் ஒன்றன்பின் ஒன்ருக ஒரே இடத்தில் பாடிச் சென்றிருப்பர். அங்ஙனம் இன் றிப் பற்பல இட்ங்களில் தம் உள்ளம் சென்ற நிலையில் தலங்களைக் குறிப்பிட்டுப் பாடிப்போதலின் தலங்களே. ஒருங்கே கூற மனம் கொண்டிலர் என்பதும் தெரியவரு கிறது. இதனைப் பின்வரும் அடிகளைக் காட்டியும் நன்கு நிறுவலாம்.

பாாய்த்துறை மேவிய பரனே போற்றி சிராப்பள்ளி பேவிய சிவனே போற்றி

என்று திருத்தலங்களைக் குறித்துப் போற்றி, உடனே மற்ருேர் பற்றிங்கறியேன் போற்றி ' என்று பாடிக் கொண்டு செல்கின்றமையின், தலங்களை ஒரே தொடர் பில் பாடவேண்டுமென்ற கருத்தில் பாடிற்றிலர் என் பதை உணர்ந்துகொள்ளலாம். ஆகவே, கலையார் அரிகேசரியாய் போற்றி' என்னும் தொடரில் அரிகேசரி என்பது ஒருதலத்தைக் குறிப்பதாகும் என்ற பொருளை உறுதியாகக் கொள்ள முடியாது. அற்ருயின்,

கவைத்தலை மேவிய கண்ணே போற்றி குவைப்பதி மலிந்த கோவே போற்றி என்னும் தொடரில் உள்ள. கவைத்தலே, குவைப்பதி என்பனவும் தலங்களைக் குறியாவோ?"என்று வினவவும் கூடும். அவ்விரண்டும்கூடத் தலங்கள் அல்ல என்பது, காழி தாண்டவராயர் எழுதிய திருவாசக வியாக்கியா னத்தால் தெரியவருகின்றது. ' கவைத்தலே மேவிய