பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

கண்ணே போற்றி' என்பதற்கு 'வேதாகம முடிவாகிய ஞானக் கிண்னன நாதனே ! உன் அடிமையை இரட்சிப் பாயாக’ என்றும், 'குவைப்பதி மலிந்த கோவே டோற்றி" என்பதற்குப் 'பார்முழுதும் திருப்பதியாகி அவைக்கு காதகை விளங்கும் கோவே, உன் அடிமையை இரட் சிக்க ' என்றும் அப்பெரியார் பொருள் கூறிச் சென் றனர். கவைத்தலை, குவைப்பதி அரிகேசரி என்னும் தொடர்கள் தலங்களைத் குறிக்கின்றன என்று மயக்க உணர்வில்ை ஒருசிலர் கொள்ளக்கூடும் என்பதை நன்கு சிந்தித்தே காழி தாண்டவராயர் இங்கனம் நுட்பமாகப் பொருள் விளக்கிச்சென்றுள்ளார்.

ஊசல், அம்மானை, சாழல் போன்ற நங்கைப் பாடல் கள் திருவாசகத்தில் வருவதைக் காட்டி, இவை பழங் காலப் பாடல்களில் காணப்படாதவை என்று கூற முன்வருவர். சிலப்பதிகாரம், சங்ககாலத்தை ஒட்டிய நூல் என்பது எவருக்கும் ஒப்பமுடிந்த முடிபாதலின், அந்தச் சிலப்பதிகார நூலில் நங்கைப்பாடல்கள் நிரம்பி இருத்தலைக் காணலாம். அச் சிலப்பதிகார வாழ்த்துக் காதையில்,

சோழன் புகார்ககாம் பாடேலோர் அம்மானை ' என்றும்,

' கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் ' என்றும்,

பாடல்சால் முத்கம் பவழ உலக்கையால்

மாட மதுரை மகளிர் கு சவனே

என்றும் பாடப்பட்டவை நங்கைப் பாடல்கள்

  • அல்லவோ ? ஆகவே, இதனை உணர்ந்தபின்பேனும்