பக்கம்:பொய்யடிமை இல்லாத புலவர்-யார்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகுந்தமையினே மகாவமிசம் என்னும் நூல் எடுத்து இயம்புகிறது. இந்த நிகழ்ச்சி கி. பி. மூன்ருவது நூற். ருண்டில் நிகழ்ந்ததாக அந்நூல் குறிப்பிடுகிறது.

சீரிய கிறிஸ்தவப் பாதிரியார் தம் மதக் குருக்களுக்கு எழுதிய கோட்டயக் கோயில் கடிதம் கி. பி. மூன்ரும் நூற்முண்டினது. அக்கடிதத்தில் மணிமொழியார் பல கிறிஸ்தவர்களை மதமாற்றிச் சைவ சமயத்தவர்களாகச் செய்தமை குறிக்கப்பட்டுள்ளது. இதனை கா. சுப்பிர மணியம் பிள்ளை எம். ஏ , எம். எல். அவர்கள், நன்கு எடுத் துக்காட்டி விளக்கியுள்ளார். அதுவே அவர் எழுதிய மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரம் என்னும் நூலில் பின்வருமாறு எழுதியிருப்பதாகும்.

இவர் மூன்றுவது நாற்ருண்டின் பிற்பகுதிலேயே நிலவுலகில் திகழ்ந்தனர் என்பது உயர்திரு மறைமலே அடிகளால் மிக விரிவான ஆராய்ச்சி செய்து முடிவு. கட்டப்பட்டது. அஃது அந்நூற்ருண்டிலேயே தென் னிந்தியாவின் மேலைக்கரையில் குடியேறி வந்திருந்த பாதிரிமார்களால் ஏட்டுச் சுவடியில் அப்பெருந்தகையார் சார்பாக எழுதிவைத்த குறிப்புக்களால் ஐயத்திற்கு இட இல்லாதபடி வலியுறுதல் காண்க. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சங்கத்தின் தொல் நூல் அமைச்சராய் விளங்கும் திருவாளர் ஜே. கே. ஜோசப் அவர்கள் மாணிக்கவாசகரைப் பற்றிய மலையாளக் கிறித்துவச் செப்புப் பட்டயங்களேத் தமது நூலொன்றில் தொகுத்து வெளியிட்டிருக்கின்றர். அவைகள் மலேயாள எழுத்தில் இருப்பதால், மாணிக்கவாசகப் பெருமான் சார்பான செப்புப்பட்டியத்திலுள்ள சொற்ருெடர்களைத் தமிழ் எழுத்தில் எழுதித் தெரியாத சொற்களுக்குப் பொருள் விளக்கமும் சேர்த்து இந்நூல் எழுதும் காலத்திலே